»   »  புலிக்கு யு... அக்டோபர் 1-ல் ரிலீஸ்!

புலிக்கு யு... அக்டோபர் 1-ல் ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் நடித்துள்ள புலி படம் நேற்று தணிக்கைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. படத்துக்கு யு சான்று வழங்கியுள்ளனர்.

வரும் அக்டோபர் முதல் தேதி உலகெங்கும் வெளியாகிறது புலி.


Puli gets clean U

ஏற்கெனவே வெளியாகியுள்ள இப்படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள், ப்ரோமோ பாடல் ஆகியவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.


இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹான், ஹன்சிகா, நான் ஈ சுதீப், ஸ்ரீதேவி, பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


Puli gets clean U

தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். நட்டி நடராஜ் ஒளிப்பதிவு அமைத்துள்ளார். எஸ்.கே.டி. ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் பி.டி.செல்வகுமார், சிபு தமீன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.


இந்தப் படம் நேற்று தணிக்கைக் குழு அதிகாரிகளுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது.


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கும்படியான
ஒரு கதை என்பதால் எந்த சிக்கலுமின்றி யு சான்று கிடைத்துள்ளது.

English summary
Vijay's Simbu Devan directed Puli has sent to censor got a clean U.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil