»   »  யார் வேணும்னாலும் மீம்ஸ், மாம்ஸ் போடலாம், ஆனால் நான் வைரம் வைரம் தான்: டி.ஆர்.

யார் வேணும்னாலும் மீம்ஸ், மாம்ஸ் போடலாம், ஆனால் நான் வைரம் வைரம் தான்: டி.ஆர்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தான் புலி பட இசை வெளியீட்டு விழாவில் பேசியதை வைத்து மீம்ஸ் போட்டவர்களை விளாசியுள்ளார் இயக்குனரும், நடிகருமான டி. ராஜேந்தர்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா, ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நடித்த புலி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரமாண்டமாக நடந்தது.

அந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனரும், நடிகருமான டி. ராஜேந்தர் விஜய்யை ஏகத்திற்கும் புகழ்ந்து பேசினார்.

புலி

புலி

நாட்டில் இருக்கலாம், காட்டில் இருக்கலாம் ஆயிரம் புலி ஆனால் இந்த புலி அட்மைர் பண்ற புலி, அட்டாக் பண்ற புலி, அட்டகாசமான புலி, அசத்தலான புலி, அசுர புலி, அசரா புலி, அற்புத புலி, அபூர்வ புலி என டி.ஆர். பேசிக் கொண்டே போக விஜய் மேடைக்கு ஓடி வந்து ஒரு சால்வையை போர்த்தி அவரை ஆஃப் செய்தார்.

மீம்ஸ்

மீம்ஸ்

புலி, புலி, புலின்னு டி. ராஜேந்தர் பேசியதை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் போடப்பட்டன. புலி இசை வெளியீட்டு விழாவுக்கு பிறகு சில நாட்களாக புலி மீம்ஸாக இருந்தது.

டி.ஆர்.

டி.ஆர்.

தான் பேசியதை வைத்து மீம்ஸ் போட்டது குறித்து டி.ஆர். பிரபல ஆங்கில செய்தி இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, யார் வேண்டுமானாலும் பாத்ரூமில் பாடலாம் அல்லது பேசலாம் ஆனால் அதை பலரால் மேடையில் செய்ய முடியாது என்றார்.

விஜய்

விஜய்

அன்று நான் விஜய் பற்றி அவர் ரசிகர்கள் மத்தியில் பேசி பாராட்டு பெற்றேன். புலி நிகழ்ச்சியில் பேசிய பிறகு ட்விட்டரில் 3வது இடத்தில் நான் டிரெண்ட் ஆனேன். இது எத்தனை மீம்ஸ் மேக்கர்ஸால் முடியும்? என டி.ஆர். கேள்வி எழுப்பினார்.

வைரம்

வைரம்

எல்லோராலும் மீம்ஸ் அல்லது மாம்ஸ் அல்லது பாடல்களை உருவாக்க முடியும் ஆனால் அனைவராலும் அப்படி பேச முடியாது. வைரம் வைரம் தான் என்றார் டி.ஆர்.

English summary
Director cum actor T. Rajendhar has responded to the memes created based on his speech at Puli audio launch programme.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil