»   »  புலி பட ரிலீஸ் தேதி திடீர் என 2 வாரத்திற்கு தள்ளி வைப்பு

புலி பட ரிலீஸ் தேதி திடீர் என 2 வாரத்திற்கு தள்ளி வைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் புலி படத்தின் ரிலீஸ் தேதி 2 வாரம் தள்ளிப் போயுள்ளது.

Select City
Buy Chiruthai Puli (U/A) Tickets

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்டோர் நடித்துள்ள புலி படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். புலி படத்தின் டிரெய்லரை யூடியூப்பில் இதுவரை 40 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.


Puli release date postponed

டிரெய்லர் சான்சே இல்லை, செம என விஜய் ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள். புலி படத்தை செப்டம்பர் 17ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் ரிலீஸ் தேதியை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர். அதன்படி படம் அக்டோபர் மாதம் 1ம் தேதி தான் ரிலீஸ் ஆகிறது.


இது குறித்து புலி படத்தின் தயாரிப்பு நிறுவனமான எஸ்.கே.டி. ஸ்டுடியோஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,அக்டோபர் 1ம் தேதி புலி படம் ரிலீஸ் ஆகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் சில வேலைகள் இருப்பதால் ரிலீஸ் தேதி தள்ளிப்போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


English summary
Vijay starrer Puli's release date has been postponed for two weeks. So, Puli will hit the screens not on september 17th but on october 1st.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil