twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆங்கிலேயரை முதன் முதலில் போரில் துரத்தியடித்த பூலித்தேவர்

    |

    Recommended Video

    SYERAA : ACTOR CHIRANJEEVI SPEECH | SYERAA TAMIL PRESSMEET | FILMIBEAT

    சென்னை: 1755 முதல் 1767 வரை 12 ஆண்டுகள் வெள்ளையரை எதிர்த்து 17 முறை போரில் நின்றவர், பூலித்தேவன். இதில் 15 போர்களில் வெள்ளையரின் படையை ஓடஒட விரட்டி அடித்த மாவீரன் பூலித்தேவன். வெள்ளையரை எதிர்த்த முதல் வீரரும் அவர்தான். முதலில் திருப்பி அடித்தவரும் இவர்தான்.

    ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தர நாடு முழுவதும் எத்தனையோ இளைஞர்கள் துணிந்து போராடி தங்கள் உயிரை மாய்த்துகொண்டனர். இவர்களில் வெகு சிலரைப் பற்றி மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம்.

    Puli Thevar was a first freedom fighter against the British

    இவர்களில் முதன்மையானவர் தமிழ்நாட்டில் பிறந்து ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட பூலித்தேவர். இரண்டாவதாக நம் கண் முண் நிற்பவர் வீரபாண்டிய கட்டபொம்மு. கட்டபொம்முவைப் பற்றி நாம் வரலாறு புத்தகத்தில் படித்திருப்போம். ஆனால் பூலித்தேவனைப் பற்றி பெரும்பாலானவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்.

    ஒவ்வொரு ஸ்டண்டுக்கும் ஸ்கிரிப்ட் எழுதுவேன்... புதிதாக கற்றுக்கொள்வேன் -ஸ்டண்ட் சில்வாஒவ்வொரு ஸ்டண்டுக்கும் ஸ்கிரிப்ட் எழுதுவேன்... புதிதாக கற்றுக்கொள்வேன் -ஸ்டண்ட் சில்வா

    மொகலாயப் பேரரசின் கடைசி பேரரசரான ஔரங்கசீப் மறைந்த 1707ஆம் ஆண்டுக்கு பிறகு வேகமாக தலையெடுக்க தொடங்கிய ஆங்கிலேய ஆட்சியை முதன் முதலில் எதிர்த்து போரிட்டவர் நமது பூலித்தேவரே. 1715ஆம் ஆண்டு பிறந்து இவர் தனது வாழ்நாள் இறுதி வரையிலும் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி அவர்களை விரட்டியடித்தார்.

    Puli Thevar was a first freedom fighter against the British

    ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு 12 ஆண்டுகளில் 15 முறை வெற்றி பெற்றவர் பூலித்தேவன். இறுதியாக இவர் 1767ஆம் ஆண்டு இறந்து விட்டதாக சொல்லப்பட்டாலும், அது உண்மையில்லை. 1767ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் தோற்ற பூலித்தேவரை கைது செய்த ஆங்கிலேயர்கள், அவரை சிறைக்கு கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோவிலில் சாமி கும்பிடச்சென்றவர் அந்த கோவிலிலேயே மறைந்து விட்டார். இது பற்றிய கல்வெட்டு அந்த கோவிலில் இன்றைக்கும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் தெலுங்கில் உருவாகியிருக்கும் சயீரா நரசிம்மா ரெட்டி படத்தின் தமிழ் வெளியீட்டுக்கான விளம்பர நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமையன்று சென்னையில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அந்த படத்தின் நாயகன் சிரஞ்சீவி அவர்கள், நரசிம்மா ரெட்டி வெள்ளையரை எதிர்த்து முதன் முதலில் போரிட்டவன் என்று கருத்து தெரிவித்தார். அதாவது, சிப்பாய் கலகத்திற்கு முன்பே வெள்ளையாரை எதிர்த்து போரிட்ட சில வீரர்களின் பெயரைச் சொல்லி, அதற்கு முன்பாகவே இவர் முதல் சுதந்திர போராட்ட வீரர் என்ற கருத்தை பதிவு செய்தார்.

    ஆனால், உண்மை அதுவல்ல. ஏற்கனவே, பழசிராஜா என்கிற படம் மலையாளத்தில் உருவாகி அந்த படம் தமிழிலும் வெளியானது. அந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பழசி ராஜாவாக நடித்திருந்த மம்முட்டி அவர்களும், முதல் சுதந்திர போராட்ட வீரர் பழசிராஜா என்ற கருத்தைக் கூறினார்.

    ஆனால், அப்போது பத்திரிகையாளர் சந்திப்பு நடந்த போது அவருடன் பேசுகின்ற வாய்ப்பு கிடைத்தது. அப்போது வெள்ளையரை எதிர்த்து 1767 வரை களத்தில் நின்றவர், தமிழ் மன்னர் பூலித்தேவன். அவர்தான் முதல் சுதந்திர போராட்ட வீரர்.

    அவருக்கு பிறகு, சின்ன மருது பெரிய மருது காலகட்டத்தில் 1793ல் துணை நின்றவர் பழசி ராஜா என்று அவரிடம் தெரிவித்த போது, அப்படியா, கேரளாவில் அவர் முதல் வீரர் என்று பெருந்தன்மையாக மாற்றிக் கொண்டார், மம்மூட்டி.

    இப்போது நரசிம்ம ரெட்டி முதல் சுதந்திர போராட்ட வீரர் என்று இங்கே பதிவு செய்திருக்கிறார் நம்முடைய சிரஞ்சீவி. ஆனால், நரசிம்ம ரெட்டியின் காலம் 1847.

    1755 முதல் 1767 வரை 12 ஆண்டுகள் வெள்ளையரை எதிர்த்து 17 முறை போரில் நின்றவர், பூலித்தேவன். இதில் 15 போர்களில் வெள்ளையரின் படையை ஓடஒட விரட்டி அடித்த மாவீரன் பூலித்தேவன். வெள்ளையரை எதிர்த்த முதல் வீரரும் அவர்தான். முதலில் திருப்பி அடித்தவரும் இவர்தான்.

    ஆகவே, எழுதுகின்ற நம்ம சினிமா பத்திரிகை நண்பர்கள் முதல் சுதந்திர போராட்ட வீரர் யார் என்பதை நீங்கள் இணையதளத்தில் போய் தெரிந்து கொண்டு அதன் பிறகு எழுதுங்கள்.

    இந்த மண்ணிற்காக போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களை நாம் மதிப்போம். அதே நேரத்தில் முதல் சுதந்திர போராட்ட வீரர் யார் என்பதையும் மனதில் ஏந்துவோம்..

    Read more about: tamil cinema
    English summary
    For 12 years from 1755 to 1767, Puli Thevar was 17 time warrior against the British. In these 15 battles, the hero of the war, the warrior, Puli Thevar. He was also the first warrior to resist the British. He was the first to return.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X