»   »  ஜூன் 22 விஜய் பிறந்த நாளில் புலி படத்தின் ட்ரைலர்...சிம்பு தேவன் அறிவிப்பு

ஜூன் 22 விஜய் பிறந்த நாளில் புலி படத்தின் ட்ரைலர்...சிம்பு தேவன் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய்யின் புலி படத்தின் ட்ரைலர், அவரது பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி வெளியாகும் என படத்தின் இயக்குநர் சிம்பு தேவன் அறிவித்துள்ளார்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி'. ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பி ராமையா நடித்து வரும் இப்படத்திற்கு இசை தேவிஸ்ரீபிரசாத் அமைத்துள்ளார்.

பிறந்த நாள் பரிசு

பிறந்த நாள் பரிசு

தற்போது விஜய் தனது குடும்பத்துடன் விடுமுறைக்கு லண்டன் சென்று உள்ளார். அவரது பிறந்த நாள் வருகிற 22 ந்தேதி வருகிறது.

பிறந்த நாள் பரிசாக தனது ரசிகர்களுக்கு புலி படத்தின் டிரைலரை அன்று வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இதனை நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் இயக்குநர் சிம்புதேவன். விஜய்யின் பிறந்த நாளையொட்டி ரசிகர்கள் அவர் சார்பில் தரப்படும் சிறப்புப் பரிசு இது என்றார்.

ஆன்லைனில்..

ஆன்லைனில்..

ஆனால் தனி விழாவாக நடத்தி ட்ரைலரை வெளியிடாமல், ஆன்லைனில் யு ட்யூபிலேய் வெளியிடவிருக்கின்றனர்.

அடுத்த பட அறிவிப்பு

அடுத்த பட அறிவிப்பு

அன்றே, கலைப்புலி தாணு தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய பட அறிவிப்பும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த முறை பிறந்த நாளன்று விஜய் சென்னையில் இருக்கமாட்டார் என்று தெரிகிறது.

English summary
Vijay's magnum opus Puli trailer will be hit online on his birthday June 22nd.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos