twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு வாரம் கெடு: இறங்கி வராவிட்டால் வடிவேலுவுக்கு ரெட் கார்டு

    By Siva
    |

    Recommended Video

    வலுக்கும் புலிகேசி பிரச்சனை- வீடியோ

    சென்னை: இம்சை அரசன் 24ம் புலிகேசி விஷயத்தில் ஒரு முடிவு எடுக்க வடிவேலுவுக்கு ஒரு வாரம் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாம்.

    இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகமான 24ம் புலிகேசி படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது. படம் குறித்த அறிவிப்பு வெளியிட்ட கையோடு ஃபர்ஸ்ட் லுக் ஃபோஸ்டர் எல்லாம் வெளியிட்டனர்.

    அதன் பிறகு பிரச்சனை ஏற்பட்டு படம் நின்றுவிட்டது.

    நிறுத்தம்

    நிறுத்தம்

    படப்பிடிப்பு துவங்கிய 10 நாட்களில் இயக்குனர் சிம்புதேவனுக்கும், வடிவேலுவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு படப்பிடிப்பு நின்றது. இதையடுத்து வடிவேலு படத்தை விட்டு வெளியேறினார்.

    புகார்

    புகார்

    வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் வடிவேலுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. மேலும் ரூ. 1 கோடி கொடுத்தால் படத்தில் நடிப்பதாக வடிவேலு தெரிவித்துள்ளாராம். இதை படத்தின் தயாரிப்பாளரான ஷங்கர் எதிர்பார்க்கவில்லையாம்.

    ஷங்கர்

    ஷங்கர்

    வடிவேலு படத்தை விட்டு விலகியதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் ரூ. 9 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று ஷங்கர் கூறியிருந்த நிலையில் வடிவேலு மேலும் ரூ. 1 கோடி சம்பளம் கேட்டுள்ளார்.

    முடிவு

    முடிவு

    தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவுக்கு ஒரு வார காலம் அவகாசம் அளித்துள்ளதாம். எந்த நிபந்தனையும் விதிக்காமல் படத்தில் நடிக்க வேண்டும் அல்லது ரூ. 9 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் இதில் ஏதாவது ஒன்றை செய்யாவிட்டால் அவருக்கு ரெட் கார்டு வழங்கப்படுமாம்.

    English summary
    Producers council has reportedly given one week time to Vadivelu to either to act in 24am Pulikesi or to settle Rs. 9 crore to the makers, else he will be given red card.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X