Pulimada Teaser - ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படம்.. கவனம் ஈர்க்கும் புலிமடா டீசர்
திருவனந்தபுரம்: Pulimada (புலிமடா) ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் புலிமடா படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.
இரட்ட படத்துக்கு பிறகு ஏ.கே.சாஜனும், ஜோஜு ஜார்ஜும் மீண்டும் இணைந்திருக்கும் படம் புலிமடா. மலையாளத்தில் பல்வேறு நல்ல திரைப்படங்களை கொடுத்த ஏ.கே.சாஜன், புலிமடா படத்தில் எழுத்தாளர்-இயக்குனர்-எடிட்டர் என மூன்று அவதாரங்களை எடுத்துள்ளார். ஐன்ஸ்டீன் மீடியா மற்றும் லேண்ட் சினிமாஸ் பேனரில் ஐன்ஸ்டீன் சேக் பால் மற்றும் ராஜேஷ் தாமோதரன் ஆகியோர் இணைந்து இத்திரைப்படத்தை தயாரிக்கின்றனர்.

இரட்டாவின் இரண்டாம் பாகம்?: இயக்குனர் ஜோஷி மற்றும் ஜோஜுவின் படங்களை ஐன்ஸ்டீன் மீடியா ஆண்டனி தயாரித்துள்ளார். பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த "இரட்டா" திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இது இருக்கலாம் என கருதப்படுகிறது. படத்தின் இன்னொரு ஸ்பெஷலாக\ பத்து வருட இடைவெளிக்குப் பிறகு பிரபல ஒளிப்பதிவாளர் வேணு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். 60 நாட்களில் ஒரே மூச்சில் படமாக்கப்பட்டு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை கொண்ட மிகப்பெரிய பட்ஜெட் படமாக புலிமடா உருவெடுத்துள்ளது.
ஜெய் பீம் லிஜோமோல்: தமிழில் சிகப்பு மஞ்சள் பச்சை, ஜெய் பீம் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்த லிஜோமோல் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரைத் தவிர்த்து பாலச்சந்திர மேனன், செம்பன் வினோத், ஜானி ஆண்டனி, ஜாபர் இடுக்கி, ஜியோ பேபி, அபு சலீம், சோனா நாயர், கிருஷ்ண பிரபா, பாலி வில்சன், ஷிபிலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
கதைக்களம் என்ன?: ஒரு போலீஸ் கான்ஸ்டபிளான வின்சென்ட் ஸ்காரியாவின் (ஜோஜு ஜார்ஜ்) என்ற கதாபாத்திரத்தின் திருமணமும் அது தொடர்பான நிகழ்வுகளும் அது கொண்டு வரும் மாற்றங்களும் புலிமடாவின் கதைக்களம் என தெரிவிக்கப்படுகிறது. புலிமடா மூலம் அவரது கதாபாத்திரமும் வாழ்க்கையும் பார்வையாளர்களுக்கு அழகாகவும், தெளிவாகவும் சொல்லப்படும் என்று படக்குழு வட்டாரம் தெரிவிக்கிறது.

வெளியானது டீசர்: படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது. இந்தச் சூழலில் படத்தின் டீசர் இன்று வெளியாகியிருக்கிறது. டீசரில் ஜோஜு ஜார்ஜிடம் லைட் ஆஃப் பண்ண சொல்கிறார் ஐஸ்வர்யா. பிறகு திருமணம் நடந்துவிட்டதா என கேட்க அதற்கு ஜோஜு இல்லை என்கிறார். அதுவரை அமைதியாக போய்க்கொண்டிருந்த டீசரில் தனக்கு திருமணம் ஆகவில்லை என ஜோஜு சொல்லிய பிறகு ஒரு த்ரில்லிங் ஃபீலிங் ஒட்டிக்கொள்கிறது. எனவே இது எந்த மாதிரியான ஜானரில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. டீசரை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.
நல்ல டீம்: டீசரில் பின்னணி இசை கவனம் ஈர்க்கிறது. பின்னணி இசையை அனில் ஜான்சன் அமைத்திருக்கிறார். பாடல்களுக்கு இஷான் தேவ் இசையமைத்திருக்கிறார். பாடல் வரிகளை ரபிக் அகமது, டாக்டர் தாரா ஜெயசங்கர், மைக்கேல் பனச்சிகல் ஆகியோர் எழுதியுள்ளனர். படத்தொகுப்பாளராக ஏ.கே.சாஜன், தயாரிப்பு வடிவமைப்பாளராக வினேஷ் வங்காளன், கலை இயக்கத்தில் ஜித்து செபாஸ்டியன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











