twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பேச தயாராகும் 'புலிமுருகன்'!

    By Shankar
    |

    மோகன்லாலின் புலிமுருகன் படம் பெரும் வெற்றிப் பெற்றதையடுத்து, அந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளனர்.

    மோகன்லால், கமாலினி முகர்ஜீ, ஜெகதிபாபு, நமிதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வைஷாக் இயக்கத்தில் முலக்குப்படம் பிலிம்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான படம் 'புலி முருகன்'.

    Pulimurugan to speak multi languages

    வெளியிட்ட அனைத்து திரையரங்குகளிலும் வசூல் சாதனை படைத்த புலிமுருகன் திரைப்படம் மோகன்லாலின் திரைத்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது.

    இப்படத்தின் மற்ற மொழி உரிமையை பெற பலர் போட்டியிட, இறுதியில் புலிமுருகன் படத்தின் இந்திய உரிமையை அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ்.பி.பிள்ளை பெற்றுள்ளார்.

    பாகுபலி படத்திற்கு பிறகு பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இப்படத்தில் நடிக்க உச்ச நட்சத்திரங்களுடன் பேச்சு வார்த்தை நடந்துவருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் இப்படம் உருவாகவுள்ளது.

    புலிமுருகனின் இந்திய மொழிகள் பதிப்பை பெற்றுள்ள ரமேஷ்.பி.பிள்ளையின் அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனத்துடன் தோமிச்சனின் முலகுப்பாடம் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது.

    English summary
    Abhishek Films Ramesh.P.Pillai has announced that he would remake the Mohan Lal starrer superhit Malayalam movie Puli Murugan in multi languages including Tamil.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X