twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலை சினிமாவாகிறது

    By Mayura Akilan
    |

    விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் தலைவர் பிரபாகரனின் 14 வயது மகன் பாலச்சந்திரன் சிங்கள ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திரைப்படமாகிறது.

    இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் சிங்கள ராணுவ வெறியர்களால் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டதாக கடந்த வருடம் வெளியான படங்கள் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின.

    பாலச்சந்திரனை ராணுவ பதுங்கு முகாமில் பிடித்து வைத்து சுட்டுக் கொன்று இருந்தனர். இதனை கண்டித்து தமிழகத்தில் மாணவர்கள் போராட்டங்களில் குதித்தார்கள். இக்கொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள்.

    புலிப்பார்வை

    புலிப்பார்வை

    பிரவின்காந்த் இயக்கி நடிக்கும் புலிப்பார்வை படத்தில் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட காட்சிகள் சேர்க்கப்படுகின்றன.

    100 சிறுவர்களில் தேர்வு

    100 சிறுவர்களில் தேர்வு

    பாலச்சந்திரன் கேரக்டரில் நடிக்க 100 சிறுவர்களை பரிசீலித்து இறுதியில் பொருத்தமான சிறுவனை டைரக்டர் தேர்வு செய்துள்ளார்.

    இறுதிப் போர்

    இறுதிப் போர்

    விடுதலைப்புலிகள், சிங்கள ராணுவத்தினர் இடையே நடந்த சண்டைகள் இலங்கை ராணுவத்தின் மனித உரிமை மீறல்கள் போன்றவையும் இப்படத்தில் காட்சிபடுத்தப்படுகிறது.

    வேந்தர் மூவிஸ்

    வேந்தர் மூவிஸ்

    புலிப்பார்வை திரைப்படத்தை வேந்தர் மூவிஸ் மதன் தயாரித்து வெளியிடுகிறார்.

    English summary
    Director Praveen Kanth has captured the sad story of Balachandran, the Son of LTTE Leader Prabhakaran in the silver screen and he has started making the film titled Pulippaarvai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X