»   »  புலிக்குப் பூஜை!

புலிக்குப் பூஜை!

Subscribe to Oneindia Tamil

ஜித்தன் ரமேஷ், மல்லிகா கபூரின் நடிப்பில் உருவாகும் புலி வருது படத்தின் பூஜை சென்னையில் மெகா விழாவாக நடந்தது.

பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரியின் மகனும், ஜீவாவின் அண்ணனுமான ரமேஷ், ஜித்தன் மூலம் ஹீரோவாக மாற்றப்பட்டார். அதன் பின்னர்அவருக்கு உருப்படியாக ஒரு படமும் ஓடவில்லை.

ஜீவா அப்படி இப்படியென்று கோலிவுட்டில் ஒரு இடத்தை பிடித்துவிட்ட நிலையில், மூத்த மகன் ரமேஷ் குறித்து செளத்ரி கவலையுடன் தான்இருக்கிறார்.

ரமேஷ் 3 வருடங்களாக முக்கியும் தேறவில்லை ரமேஷ். அவரை வைத்து மதுரை வீரன் என்ற படத்துக்குப் பூஜை போட்டார் அப்பா செளத்ரி.ஆனால் நிதிப் பிரச்சினை காரணமாக படம் வளரவில்லை.

இதனால் அப்செட் ஆகியிருந்த ரமேஷுக்கு கல்யாணத்தை நடத்தி வைத்து கவனத்தை தற்காலிமாக திசை திருப்பினார்கள். இந்த நிலையில்தான்வந்தது புலி வருது படம். இதில் மல்லிகா கபூர், ரமேஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தை அவர் மிகவும் முக்கியமாக நினைக்கிறார்.கிட்டத்தட்ட டு ஆர் டை நிலைதான்.

இந்தப் படத்தில் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார் ரமேஷ் (ஒத்தையா வந்தே ஒண்ணும் முடியலே, இதில் இரட்டை வேறயா?).ஜி.வி.குமார் இயக்குகிறார், ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.

கருணாஸுக்கு இப்படத்தில் முக்கிய ரோலாம் (நல்லா கடிபடப் போறோம்!). லண்டனைச் சேர்ந்த ஆண்டனிதான் இப்படத்தை தயாரிக்கிறார். இவர்ஏற்கனவே மனதோடு மழைக்காலம் படத்தைத் தயாரித்தவர்.

படத்தின் பூஜை ஏவி.எம். ஸ்டுடியோவில் கோலாகலமாக நடந்தது. முதல் ஷெட்யூலை முடித்து விட்டு லண்டனுக்குப் பாட்டுகளை சுட பறக்கஇருக்கிறார்களாம்.

இந்தப் படத்திலாவது நல்லா நடிக்க முயற்சி செய்ங்க ரமேஷ். முதல்ல நல்லா தமிழ் பேச பழகுங்க.

Read more about: puli varuthu film pooja

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil