ஒரு வருஷம் கூட ஒண்ணா வாழல.. ஜி.வி. பிரகாஷ் பட ஹீரோயினை 2ம் திருமணம் செய்துக் கொண்ட பிரபல நடிகர்!

மும்பை: ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான புரூஸ் லீ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை கிருத்தி கர்பந்தா (Kriti Kharbanda) பிரபல பாலிவுட் நடிகர் புல்கித் சாம்ராட்டை (Pulkit Samrat) திருமணம் செய்துக் கொண்டார். அவரது திருமண புகைப்படங்கள் சற்றுமுன் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல பிரபலங்களும் ரசிகர்களும் புல்கித் சாம்ராட் மற்றும் கிருத்தி கர்பந்தாவை வாழ்த்தி வருகின்றனர். மணக்கோலத்தில் மாப்பிள்ளையும் பொண்ணும் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகின்றன.

Pulkit Samrat marries G V Prakash Kumar s Bruce Lee movie heroine Kriti Kharbanda

பாலிவுட் நடிகர் புல்கித் சாம்ராட்டுக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.வி. பிரகாஷ் ஜோடி: 2009ம் ஆண்டு தெலுங்கில் வெளியான போனி படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் கிருத்தி கர்பந்தா. மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு ஜோடியாக அவர் நடித்த சிரு படத்தில் நடித்தார். தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்த க்ரித்தி 2016ம் ஆண்டு ராஸ் தி ரோபோ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதே ஆண்டு ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் தமிழில் வெளியான புரூஸ் லீ படத்திலும் இவர் தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்திற்கு பிறகு தமிழில் நடிக்காத கிருத்தி அதிகமாக பாலிவுட்டில் நடிக்கத் தொடங்கினார்.

Pulkit Samrat marries G V Prakash Kumar s Bruce Lee movie heroine Kriti Kharbanda

புல்கித் சாம்ராட்: 40 வயதாகும் பிரபல பாலிவுட் நடிகர் புல்கித் சாம்ராட் ஃபக்ரி, சனம் ரே, வீரே கி வெட்டிங், பாகல் பன்டி, போன்பூத், ஃபக்ரி 2 மற்றும் 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மார்ச் 15ம் தேதி புல்கித் சாம்ராட் மற்றும் கிருத்தி கர்பந்தாவின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன் புகைப்படங்களை சற்றும் முன் அந்த தம்பதியினர் சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளனர்.

Pulkit Samrat marries G V Prakash Kumar s Bruce Lee movie heroine Kriti Kharbanda

இரண்டாவது மனைவி: புல்கித் சாம்ராத் ஏற்கனவே ஸ்வேதா ரோஹிரா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். அந்த திருமணம் ஓராண்டு கூட நீடிக்கவில்லை. 2015ல் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின்னர் கிருத்தி கர்பந்தாவை காதலிக்கத் தொடங்கிய புல்கித் சாம்ராத் தற்போதுஅ வரை திருமணம் செய்துள்ளார். பாலிவுட் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் இந்த புதுமணத் தம்பதியினரை வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X