விஜயகாந்த் மகனுக்கு ஜோடி கிடைச்சிடுச்சி... ஆனால் ஸ்ரீதேவி மகள் இல்லை!
ஒரு வழியாக விஜய்காந்த் மகன் சண்முகப் பாண்டியனுக்கு சகாப்தம் படத்தில் ஜோடியாக நடிக்க ஹீரோயின் கிடைத்துவிட்டார்.

ஆனால் இவர் ஸ்ரீதேவியின் மகள் அல்ல... புனேயைச் சேர்ந்த மாடல் அழகி.
படத்துக்குப் பூஜை போட்ட கையோடு, தேர்தல் வந்துவிட்டதால், 'மக்களே'வைச் சந்திப்பதில் பிஸியாக இருந்த விஜயகாந்த், மகனுக்காக வந்திருந்த ஹீரோயின்களின் படங்களைப் பார்த்து, பின் நேரில் வரவைத்து டெஸ்ட் பண்ண பிறகு, இந்த புனே பெண்ணை ஓகே செய்தாராம்.
இப்போதைக்கு எந்தத் தகவலையும் சொல்லாதீங்க.. ஷூட்டிங் தொடங்கின பிறகு பாத்துக்கலாம் என்றும் கூறிவிட்டாராம்.
சண்முகப் பாண்டியனுக்கு ஜோடியாக முதலில் பரிந்துரைக்கப்பட்டவர் ஸ்ரீதேவி மகள் ஜான்வி. ஆனால் ஹீரோயினுக்குரிய உடல்வாகு அவருக்கு இல்லை என்பதால், வேறு நடிகையைத் தேடி வந்தனர்.
ஸ்ரீதேவியும் மகளை நடிக்க வைக்கும் எண்ணம் இல்லை என்று கூறிவிட்டது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











