புனித் ராஜ்குமார் மறைவு.. கலங்கும் ரசிகர்கள்… வைரலாகும் உடற்பயிற்சி வீடியோ !

சென்னை : கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான புனித் ராஜ்குமார் மாரடைப்பால் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 46.

ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இவரது மறைவு அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ராஜ்குமாரின் மகன் புனித்

ராஜ்குமாரின் மகன் புனித்

கன்னடத் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக விளங்கிய ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார். இவர் 1975 மார்ச் 17ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவர் பிரேமதா கனிகே படத்தில் 6 மாத கைக்குழந்தையாக நடித்துள்ளார்

கதாநாயகனாக

கதாநாயகனாக

2002ம் ஆண்டு கதாநாயகனாக அப்பு என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். இத்திரைப்படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. இதுவரை 29 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியா யுவரத்னா திரைப்படத்தில் நடித்துள்ளார். கன்னட திரையுலகில் அதிக சம்பளம் பெற்ற ஒரே நடிகர் ஆவார்.

மாரடைப்பால் மரணம்

மாரடைப்பால் மரணம்

உடலை பிட்டாக வைத்துக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்ட புனித், இன்று காலை ஜிம்மில் உடல்பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிரகண்காணிப்பில் இருந்த புனித் சிகிச்சை பலன் இன்றி 11.40 மணிஅளவில் உயிரிழந்தார்.

ரசிகர்கள் அதிர்ச்சி

இவரது மரணம் செய்து திரை உலகை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும்போதே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது அவரது ரசிகர்களைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

ஆழ்ந்த இரங்கல்

ஆழ்ந்த இரங்கல்

புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள் அவர் உடற்பயிற்சி செய்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து அவருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உடலை பிட்டாக வைத்துக்கொண்டு, தினமும் உடற்பயிற்சி செய்யும் இவருக்கே இந்த நிலைமையா என்று வருத்தத்தின் இந்த வீடியோகை பகிர்ந்து வருகின்றனர்.

கமல் இரங்கல்

கமல் இரங்கல்

புனித்தின் அகால மரணத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், அன்புத் தம்பி புனீத் ராஜ்குமாரின் மரணச் செய்தி வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கன்னடத் திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X