twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராணுவ வீரராக மிரட்டும் புனித் ராஜ்குமார்… ‘ஜேம்ஸ்’ போஸ்டரை பார்த்து கலங்கிய ரசிகர்கள் !

    |

    பெங்களூர் : மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசி படமான 'ஜேம்ஸ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

    ஜேம்ஸ் திரைப்படம் புனித் ராஜ்குமாரின் பிறந்தநாளான மார்ச் 17ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

    பிரியா ஆனந்த், மேகா ஸ்ரீகாந்த், அனு பிரபாகர் முகர்ஜீ ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் புனித் ராஜ்குமாரின் மூத்த சகோதரர்கள் ராகவேந்திரா மற்றும் ஷிவ் ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்கள்.

    தனுஷின் வாத்திக்கு இப்படி ஒரு சோதனையா...திடீரென விலகிய பிரபலம் தனுஷின் வாத்திக்கு இப்படி ஒரு சோதனையா...திடீரென விலகிய பிரபலம்

    புனித் ராஜ்குமார்

    புனித் ராஜ்குமார்

    கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் புனித் ராஜ்குமார். கடந்த அக்டோபர் 29ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மரணம் அடைந்தார். புனித் ராஜ்குமாரின் மறைவு நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை பல இளைஞர்களுக்கு முன்னோடியானது, நடிப்பு மட்டுமல்லாமல் மனிதாபிமானம், சமூக சேவை, கண்தானம், கல்வி உதவி என பல தளங்களில் அவர் பணியாற்றினார்.

    நல்லடக்கம்

    நல்லடக்கம்

    46 வயதில் அவருக்கு ஏற்பட்ட மரணத்தை யாராலும் ஜீரணிக்க முடியாமல் போனது. பெங்களூரு காண்டீரவா ஸ்டூடியோவில் உள்ள தந்தையும் நடிகருமான ராஜ்குமார், தாயார் பர்வதம்மாள் ஆகியோரின் சமாதிகளுக்கு அருகே புனீத் ராஜ்குமாரின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவருடைய நினைவிடத்தைஅவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் நாள்தோறும் வந்து பார்வையிட்டு மரியாதை செய்து வருகின்றனர்.

    ஜேம்ஸ்

    ஜேம்ஸ்

    இந்நிலையில், புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த ஜேம்ஸ் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இதில், ராணுவ வீரர் உடையில் கையில் துப்பாக்கியுடன் புனித் ராஜ்குமார் மிரட்டலாக காணப்படுகிறார். இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் கண்கலங்கினார்கள். ஜேம்ஸ் படம் கன்னட திரையுலகின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக உள்ளது. நாடு முழுவதும் உள்ள புனித்தின் ரசிகர்கள் அவரை கடைசியாக திரையில்காண காத்திருக்கிறார்கள்.

    சகோதரர்கள்

    சகோதரர்கள்

    ஜேம்ஸ் திரைப்படத்தில், புனிதத்தின் மூத்த சகோதரர்கள் சிவராஜ் குமார் மற்றும் ராகவேந்திரா ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் ஆதித்யா மேனன், ஸ்ரீகாந்த் மற்றும் அனு பிரபாகர் ஆகியோருடன் முக்கிய வேடத்தில் ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். படத்திற்கு சரண் ராஜ் இசையமைத்துள்ளார்.

    மார்ச் 17ந் தேதி ரிலீஸ்

    மார்ச் 17ந் தேதி ரிலீஸ்

    புனித் ராஜ்குமாரின் பிறந்தநாளான மார்ச் 17ந் தேதி இத்திரைப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. புனித் ராஜ்குமாரின் கடைசிப் படம் ஜேம்ஸ் மார்ச் 17 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளதால், மார்ச் 17 முதல் மார்ச் 23 வரை மாநிலத்தில் எந்தப் படத்தையும் வெளியிடப் போவதில்லை என கர்நாடக விநியோகஸ்தர்கள் முடிவு செய்துள்ளார்கள்.

    English summary
    Puneeth Rajkumar James movie first look out
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X