அரசு மரியாதையுடன் புனித் ராஜ்குமார் உடல் நல்லடக்கம்...கதறி அழுத ரசிகர்கள்

பெங்களூரு : கன்னட பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் அக்டோபர் 29 ம் தேதி காலை ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து கொண்டிருந்த போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருந்தும் சிகிச்சை பலனளிக்காமல் மாரடைப்பு ஏற்பட்டு புனித் ராஜ்குமார் உயிரிழந்தார். இந்த தகவல் இந்திய திரையுலகையே அதிர்ச்சி அடைய வைத்தது. 46 வயதாகும் புனித் ராஜ்குமார் தனது கண்களை தானம் செய்துள்ளார்.

முத்தமிட்டு அழுத முதல்வர்

முத்தமிட்டு அழுத முதல்வர்

திரையுலகை சேர்ந்த அனைவரும் புனித் ராஜ்குமாரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர். பிரதமர், மத்திய அமைச்சர்கள், கர்நாடக ஆளுநர், முதல்வர் என அனைவரும் புனித் ராஜ்குமாரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர். கர்நாடக முதல்வர் பொம்மை, புனித் ராஜ்குமாரின் நெற்றியில் முத்தமிட்டு கண்ணீர் விட்டு அழுதார். அரசியல் தலைவர்கள் பலர் நேரில் வந்து புனித்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

இதனையடுத்து ரசிகர்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக புனித் ராஜ்குமாரின் உடல் கன்தீரவா ஸ்டேடியத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் வைக்கப்பட்டது. தொடர்ந்து ஏராளமான பொது மக்களும், ரசிகர்கள் புனித் ராஜ்குமாரின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பெற்றோர் அருகில் நல்லடக்கம்

பெற்றோர் அருகில் நல்லடக்கம்

இந்நிலையில் இன்று காலை 5 மணியளவில் புனித் ராஜ்குமாரின் உறுதி ஊர்வலம் துவங்கியது. பெங்களூருவில் உள்ள கன்தீரவா ஸ்டூடியோவில், தந்தை ராஜ்குமார் மற்றும் தாய் பர்வதம்மாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே புனித் ராஜ்குமாரின் உடல், முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கதறி அழுத மகள்

கதறி அழுத மகள்

புனித் ராஜ்குமாரின் மகள் த்ரித்தி இன்று காலை தான் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தார். புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி மற்றும் மற்றொரு மகள் வந்திதா ஆகியோர் த்ரித்தியை கட்டிப்பிடித்து அழுத காட்சிகள் அனைவரையும் கலங்க வைத்தது. கொட்டும் மழை, பனி ஆகியவற்றையும் பொருட்படுத்தாமல் புனித் ராஜ்குமாரின் இறுதி ஊர்வத்தில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

10 லட்சம் ரசிகர்கள் கண்ணீர்

10 லட்சம் ரசிகர்கள் கண்ணீர்

சாலையின் இரு பக்கங்களிலும் ஏறக்குறைய 10 லட்சம் பேர் கண்ணீர் மல்க நின்று, புனித் ராஜ்குமாருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். புனித் ராஜ்குமாரின் இறுதி சடங்குகளில் ஜுனியர் என்டிஆர், யாஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X