புனீத் ராஜ்குமார் பட ரிலீஸ் முதல் சிவகார்த்திகேயனின் ஸ்டேட்மென்ட் வரை.. இன்றைய டாப் 5 பீட்ஸ்!
சென்னை: பிகே வீடியோவின் அடுத்த 5 டாப் பீட்ஸ்கள் அடங்கிய வீடியோ வெளியாகி உள்ளது.
Recommended Video
சினிமா தொடர்பான சுவாரஸ்ய தகவல்களை சென்னை ஸ்லாங்கில் கொடுத்து வருகிறார் நம்ம பிகே.
மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் ஜேம்ஸ் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு முதல் சிவகார்த்திகேயன் 10 ஆண்டுகளை கடந்ததற்காக வெளியிட்ட நன்றி கடிதம் வரை 5 சினிமா தகவல்களை இந்த வீடியோவில் கூறியுள்ளார்.

மாரடைப்பு காரணமாக கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் புனீத் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காலமான நிலையில், அவர் நடிப்பில் உருவாகி உள்ள கடைசி படமான ஜேம்ஸ் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி உள்ளது. மார்ச் 17ம் தேதி புனீத் ராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அன்றைய தினமே ஜேம்ஸ் திரைப்படம் வெளியாகிறது என்கிற முதல் பீட்டுடன் ஆரம்பமாகி உள்ள இந்த வீடியோவில் அடுத்தபடியாக கானா பாலா சுயேட்சையாக தேர்தலில் நிற்கும் தகவல் இடம்பெற்றுள்ளது.
அடுத்ததாக விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள எஃப்.ஐ.ஆர் திரைப்படம் சக்கைப்போடு போடுவது குறித்தும் ஆர்யாவின் தயாரிப்பில் அவரது சகோதரர் சத்யா இயக்குநர் அமீர் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ள தகவலையும் பிகே கூறியுள்ளார். சிவகார்த்திகேயன் 10 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், நன்றி தெரிவித்தது உள்ளிட்ட பீட்டுகளை கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











