James Review: மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் கடைசி படம்.. ஜேம்ஸ் எப்படி இருக்கு?

பெங்களூரு: மாரடைப்பு காரணமாக பிரபல கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் 29ம் தேதி காலமானார்.

அவரது மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாட அவர் நம்முடன் இல்லையே என அவரது குடும்பமும் ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், அவர் கடைசியாக நடித்த ஜேம்ஸ் படம் இன்று வெளியாகி ரசிகர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்தி உள்ளது.

இந்நிலையில், ட்விட்டரில் ஜேம்ஸ் திரைப்படம் எப்படி இருக்கு என ரசிகர்கள் எமோஷன் உடன் பதிவிட்டுள்ள விமர்சனங்களை இங்கே காண்போம்.

கடைசி படம்

கடைசி படம்

கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமாரின் தம்பியும் அப்பு என ரசிகர்கள் அன்போடு அழைத்து வந்த நடிகர் புனீத் ராஜ்குமார் வெகு சீக்கிரமாகவே மறைந்து விட்ட நிலையில், கடைசியாக ஒரு முறை அவரது நடிப்பை பெரிய திரையில் ரசிகர்கள் கண்டு களித்து வருகின்றனர். இயக்குநர் சேத்தன் குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் புனீத் ராஜ்குமாருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.

கேஜிஎஃப் இயக்குநர் உருக்கம்

கேஜிஎஃப் இயக்குநர் உருக்கம்

கன்னட திரையுலகை உலகறியச் செய்த கேஜிஎஃப் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் தனது ட்விட்டர் பக்கத்தில் உங்களின் இழப்புக்கு வருத்தம் தெரிவித்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இருந்து உங்கள் வாழ்க்கையை கொண்டாட தொடங்குவோம் என பதிவிட்டு ஜேம்ஸ் படம் வெற்றிபெற வாழ்த்தி உள்ளார்.

தெறிக்கும் தியேட்டர்கள்

தெறிக்கும் தியேட்டர்கள்

மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் நடிப்பில் உருவாகி உள்ள ஜேம்ஸ் படம் திரையாகி உள்ள தியேட்டர்களில் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மார்ச் 25ம் தேதிக்கு தள்ளிப் போக காரணமும் புனீத் ராஜ்குமாருக்கு மரியாதை செலுத்தி விதமாக படத்தை தள்ளிப்போட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரேம்பேஜ்

ரேம்பேஜ்

தியேட்டர்களில் பவர்ஸ்டாரின் ரேம்பேஜ் தெறிக்கிறது. அவரது நடனம், சண்டை காட்சிகள், ஸ்க்ரீன் பிரசென்ஸ் எல்லாமே வேற லெவல். ஆன் ஸ்க்ரீனில் அவர் இருக்கிறார் என்பதை கொண்டாடும் ரசிகர்கள் ஆஃப் ஸ்க்ரீனில் அவர் இல்லையே என வருத்தமும் அடைந்து மிக்ஸ்ட் எமோஷனில் ஜேம்ஸ் படத்தை பார்த்து வருகின்றனர்.

நோ விமர்சனம்

நோ விமர்சனம்

ஜேம்ஸ் படத்தை பார்த்த அத்தனை ரசிகர்களும், இந்த படத்தை விமர்சனம் எல்லாம் செய்யும் மனநிலையில், இல்லை. தியேட்டரில் வந்து பவர்ஸ்டார் புனீத்ராஜ்குமாரை பார்த்து விடுங்கள் என ட்விட்டரில் தொடர்ந்து ஏகப்பட்ட ட்வீட்களை போட்டு தெறிக்கவிட்டு வருகின்றனர்.

Recommended Video

எங்க பாத்தாலும் அவர் என்னை பார்த்து சிரிக்கிற மாதிரி இருக்கு! | Priya Anand | Filmibeat Tamil
என்ன கதை

என்ன கதை

செக்யூரிட்டி நிறுவனத்தை நடத்தி வரும் புனீத் ராஜ்குமார் சிட்டியில் நடக்கும் கிரைம்களை எப்படி கன்ட்ரோல் செய்கிறார் என்கிற கதையுடன் உருவாகி உள்ளது இந்த ஜேம்ஸ் திரைப்படம். இயக்குநர் சேத்தன் குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X