புனித் ராஜ்குமார் முதல் ராஜு ஸ்ரீவத்சவா வரை.. மாரடைப்பால் சமீபத்தில் உயிரிழந்த 10 பிரபலங்கள்

சென்னை: சினிமா பிரபலங்கள் ஓய்வின்றி உழைப்பது மற்றும் அடிக்கடி உடல் எடையை குறைத்து ஏற்றுவது என ஜிம்மிலேயே தங்களின் நேரத்தை அதிகம் செலவிட்டு வருகின்றனர்.

40 முதல் 50 வயதுக்கு மேற்பட்ட நடிகர்கள் தொடர்ந்து நாடு முழுவதும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து வரும் அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறி ஒட்டுமொத்த திரையுலகையும் சோகக் கடலில் ஆழ்த்தி உள்ளன.

ஜிம்மில் எப்படி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கன்னட திரையுலகின் டாப் நடிகர் புனித் ராஜ்குமார் உயிரிழந்தாரோ அதே போல தற்போது பாலிவுட் காமெடி நடிகர் ராஜு ஸ்ரீவத்சவா உயிரிழந்துள்ளார். மாரடைப்பு காரணமாக சமீபத்தில் உயிரிழந்த பிரபலங்கள் குறித்த தொகுப்பை இங்கே காண்போம்..

ராஜு ஸ்ரீவத்சவா காலமானார்

ராஜு ஸ்ரீவத்சவா காலமானார்

இந்தி சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் காமெடி நடிகர் ராஜு ஸ்ரீவத்சவா. கடந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி திடீரென ஜிம்மில் வொர்க்கவுட் செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட உடனடியாக உறவினர்கள் அவரை டெல்லியில் உள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். கிட்டத்தட்ட 41 நாள் உயிருக்கு போராடி வந்த நிலையில், சிகிச்சை ஏதும் கைக் கொடுக்காமல் அவரது உயிர் பிரிந்து விட்டது.

பாடகர் கேகே

பாடகர் கேகே

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் எனும் கேகே கொல்கத்தாவில் இசைக் கச்சேரியில் பாடி முடித்து விட்டு தனது அறைக்கு திரும்பியதும் மாரடைப்பு ஏற்பட்டு இந்த ஆண்டு மே 31ம் தேதி காலமானார். இசை நிகழ்ச்சிக்காக மேடை ஏறும் போதே அவர் உடல் நடுங்கிய சிசிடிவி வீடியோ காட்சிகள் எல்லாம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தன.

பிரதீப் பட்டவர்தன் காலமானார்

பிரதீப் பட்டவர்தன் காலமானார்

பிரபல மராத்தி நடிகர் பிரதீப் பட்டவர்தன், வயது 64, கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் தனது இல்லத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது மராத்தி சினிமா உலகையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்கு ராஜு ஸ்ரீவத்சவா இரங்கல் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

புனித் ராஜ்குமார்

புனித் ராஜ்குமார்

ராஜு ஸ்ரீவத்சவாவை போலவே கடந்த ஆண்டு அக்டோபர் 29ம் தேதி ஜிம்மில் வொர்க்கவுட் செய்து வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உயிரிழந்து ஒட்டுமொத்த சினிமாத்துறையையும் சோகத்தில் ஆழ்த்தினார். அவருக்கு வெறும் 46 வயது தான் என்பது குறிப்பிடத்தக்கது. புனித் ராஜ்குமார் மறைவுக்கு பிறகு அவர் நடித்த ஜேம்ஸ் படம் திரைக்கு வந்தது.

பிக் பாஸ் பிரபலம் சித்தார்த் சுக்லா

பிக் பாஸ் பிரபலம் சித்தார்த் சுக்லா

வெறும் 40 வயதே ஆன இந்தி பிக் பாஸ் பிரபலம் சித்தார்த் சுக்லாவும் மாரடைப்பு காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி உயிரிழந்தது ஒட்டுமொத்த தேசத்தையே உலுக்கி எடுத்தது. சித்தார்த் சுக்லாவும் ஃபிட்னஸ் ஃப்ரீக் என்பது குறிப்பிடத்தக்கது.

பீம் பாய்

பீம் பாய்

மகாபாரதத்தில் பீமராக நடித்து பிரபலமானவர் நடிகர் பிரவீன் குமார் சோப்தி. 76 வயதான இவருக்கு கடந்த பிப்ரவரி 7ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு அவரது வீட்டிலேயே காலமானார். தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காம ராஜன் படத்தில் பீம் பாய் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

காவு வாங்கும் மாரடைப்பு

காவு வாங்கும் மாரடைப்பு

கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி நெஞ்சு வலி ஏற்பட்டு நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திவீர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் ஏப்ரல் 17ம் தேதி அவர் காலமான செய்தி ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகையே சோகத்தில் ஆழ்த்தியது. அதற்கு முன் சிரஞ்சீவ் சர்ஜாவும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். மேலும், பாலிவுட் பிரபலங்களான மிதிலேஷ் சதுர்வேதி, ஸ்காட் ஹால் உள்ளிட்ட பிரபலங்களையும் சமீப காலத்தில் மாரடைப்பு காவு வாங்கி உள்ளது. ஜிம்மில் வொர்க்கவுட் செய்யும் நடிகர்கள் முறையான மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஓயாமல் உழைப்பதை தவிர்த்து போதிய ரெஸ்ட் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவித்து வருகின்றனர். மேலும், ஸ்டெராய்ட் போன்ற மருந்துகளை தவிர்க்கவும் வலியுறுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X