Don't Miss!
- Lifestyle
Shani Asta 2023: சனி அஸ்தமனமாவதால் ஜனவரி 30 முதல் மார்ச் 5 வரை இந்த ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- News
ஆளே இல்லையாமே? "அந்த" முடிவை எடுக்க போகும் டிடிவி தினகரன்? ஓபிஎஸ்ஸுக்கு லக்.. அப்போது எடப்பாடி?
- Sports
சச்சினாலேயே முடியவில்லை, மற்றவர்களால் எப்படி முடியும்.. கோலி, ரோகித்துக்கு அஸ்வின் ஆதரவு
- Finance
மாதம் ரூ.5000 வருமானம் வேண்டுமா..அஞ்சலகத்தோட MIS திட்டம் தான் சரியான சாய்ஸ்..!
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
லாரி மீது மோதிய கார்.. 30 வயது இளம் பாடகர் மரணம்.. பஞ்சாப் முதல்வர் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்
மும்பை: பிரபல பஞ்சாபி பாடகர் தில்ஜான் இன்று காலை கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருக்கு வயது 30.
தில்ஜானின் மரண செய்தியை அறிந்த பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
ரூ.6
கோடிக்கு
சொகுசு
கார்
வாங்கிய
பிரபாஸ்...டிரெண்டிங்
ஆகும்
ஃபோட்டோஸ்
பாலிவுட் மற்றும் பஞ்சாபி திரையுலக பிரபலங்கள் தில்ஜான் மரணத்திற்கு கண்ணீர் மல்க இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

கோர விபத்து
பஞ்சாபை சேர்ந்த பிரபல பாடகர் தில்ஜான் இன்று அதிகாலை (மார்ச் 30) அம்ரித்சர் அருகே தனது காரில் வந்து கொண்டிருந்த போது, பாலத்திற்கு அடியே நின்று கொண்டிருந்த டிரக் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளதாக போலீசார் முதல் கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

டிவைடரிலும் மோதல்
கார் ஓட்டிக் கொண்டு வந்த பாடகர் தில்ஜான் டிரக் மீது மோதியதும் கட்டுப்பாட்டை முழுவதுமாக இழந்து, அருகில் உள்ள டிவைடரிலும் பலமாக மோதியதில் தான் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிர் பிரிய காரணமாக இருந்திருக்கலாம் என்றும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதி
விபத்து நேர்ந்த உடனே ஆம்புலன்ஸ் மூலமாக அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாடகர் தில்ஜானுக்கு பலமாக அடிபட்டு இருந்த காரணத்தினால், சிகிச்சை பலனின்றி அவரது உயிரி பிரிந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பஞ்சாபி மொழியில் இளம் வயதிலேயே ஏகப்பட்ட ஹிட் பாடல்களை பாடி ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழுடன் இருந்தவரின் இழப்பு ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

முதல்வர் இரங்கல்
பாடகர் தில்ஜான் மறைவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில், பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், திறமை வாய்ந்த பிரபல இளம் பாடகர் இப்படி எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இன்று பலியாவார் என்று கொஞ்சமும் நினைத்து பார்க்கவில்லை. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் என பதிவிட்டுள்ளார்.

தாமதமாகும் இறுதிச்சடங்கு
பாடகர் தில்ஜானின் மனைவி மற்றும் மகள் கனடா நாட்டில் உள்ளனர். வரும் ஏப்ரல் 5ம் தேதி தான் அவர்களால் இந்தியா திரும்ப முடியும் என்பதால், அதற்கு பிறகு தான் தில்ஜானின் இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் தில்ஜானின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.