அடப்பாவமே.. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த பிரபல பாடகர்.. ஏரியில் கிடைத்த சடலம்.. பெரும் சோகம்!

மும்பை: பிரபல பஞ்சாபி பாடகர் மன்மீத் சிங் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 44.

சூஃபி பாடல்களை பாடி மிகவும் பிரபலமானவர் இவர், தர்மசாலாவுக்கு தனது நண்பர்களுடன் சென்றபோது எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் சிக்கி உள்ளார்.

கடந்த திங்கட்கிழமை அவர் காணவில்லை என போலீசாருக்கு புகார் வந்த நிலையில், நேற்று அவரது சடலம் அருகில் உள்ள கரேரி நதிக்கரையில் கிடைத்துள்ளது.

பஞ்சாபி பாடகர்

பஞ்சாபி பாடகர்

அமிர்தசரஸில் புகழ்பெற்ற செயின் சகோதரர்கள் இசைக் குழுவை சேர்ந்த பிரபல பாடகர் மன்மீத் சிங். ஹிமாச்சல பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தில் உள்ள தர்மசாலா கோயிலுக்கு தனது நண்பர்களுடன் சென்றார் பஞ்சாபி பாடகர் மன்மீத் சிங்.

பெரும் வெள்ளம்

பெரும் வெள்ளம்

தர்மசாலாவில் திடீரென ஏற்பட்ட பெரும் வெள்ளம் சமீபத்தில் பெருக்கெடுத்து ஓடுகிறது. பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் இருக்கும் படி அரசு எச்சரிக்கை விடுத்த நிலையில், ஏகப்பட்ட கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகின.

வெள்ளத்தில் மூழ்கி

வெள்ளத்தில் மூழ்கி

அந்த வெள்ளத்தில் சிக்கிய பாடகர் மன்மீத் சிங் காணவில்லை என அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்திருந்தனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உள்ளூர் மக்களின் உதவியோடு ஏரிக்கரையில் ஒரு சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.

ஏரியில் சடலம்

ஏரியில் சடலம்

கரேரி ஏரியில் கிடைத்த சடலம் பஞ்சாபி பாடகர் மன்மீத் சிங் உடையது தான் என்பதை போலீசார் உறுதி செய்த பின்னர் அவரது உடலை சொந்த ஊரான அமிர்தசரஸுக்கு அனுப்பி உள்ளனர். பிரபல பாடகர் இப்படி பரிதாபமாக உயிரிழந்த செய்தி இசை உலகத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X