என்ன ஒரே கமல் ஹீரோயினா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வராங்க.. புன்னகை மன்னன் நடிகையும் கன்ஃபார்மாம்!

சென்னை: கடலோரக் கவிதைகள், புன்னகை மன்னன் என தமிழ் சினிமாவை கலக்கிய நடிகை ரேகா பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் கலந்து கொள்ளப் போகிறார் என்கிற லேட்டஸ்ட் தகவல் கசிந்துள்ளது.

நடிகை ரம்யா பாண்டியன் மற்றும் நடிகை ரேகா முதல் நாள் ஷூட் முடிந்து ஹோம் குவாரண்டைன் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ள நிலையில், கடைசி நேரத்தில் ஏகப்பட்ட போட்டியாளர்கள் பெயர்கள் அடிபட்டு வருகின்றன.

ஏகப்பட்ட மாற்றங்கள்

ஏகப்பட்ட மாற்றங்கள்

கடந்த ஆண்டு போல இந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் இருக்காது என்றும் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட மாற்றங்களும், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளும் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொள்ளும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு ஹோம் குவாரண்டைன் மற்றும் தனி ஹோட்டல்களில் குவாரண்டைன் செய்யப்பட்டு வருகின்றனர்.

ரசிகர்களுக்கு அனுமதி இல்லை

ரசிகர்களுக்கு அனுமதி இல்லை

வழக்கமாக சனி மற்றும் ஞாயிறுகளில் உலக நாயகன் கமல்ஹாசன் வரும் போது, ஆரவாரம் செய்து ஏகப்பட்ட கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்புவார்கள், ஆனால், கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு முதலில் சில வாரங்களுக்கு ரசிகர்கள் இல்லாமல், கமல்ஹாசன் மட்டுமே தனியாக ஷோவை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது.

கன்ஃபார்ம் லிஸ்ட்

கன்ஃபார்ம் லிஸ்ட்

இதுவரை விஜய் டிவி மற்றும் பிக்பாஸ் குழு அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு போட்டியாளர் குறித்த அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், நெருங்கிய வட்டாரங்கள் யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற கன்ஃபார்ம் லிஸ்ட்டையே அறிவித்துள்ளனர். நடிகை கிரண், ரம்யா பாண்டியன், ரியோ ராஜ், விஜே அர்ச்சனா, நடிகர் சுரேஷ், சூப்பர் சிங்கர் அஜித், கேப்ரில்லா, சனம் ஷெட்டி, உள்ளிட்ட பலர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடலோர கவிதைகள் ரேகா

கடலோர கவிதைகள் ரேகா

இந்நிலையில், தற்போது கடலோர கவிதைகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரேகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார் என்கிற புதுத் தகவல் வெளியாகி உள்ளது. நடிகை ரம்யா பாண்டியன் மற்றும் ரேகா முதல் நாள் ஷூட் முடிந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

கமல் பட ஹீரோயின்கள்

கமல் பட ஹீரோயின்கள்

அன்பே சிவம் படத்தில் நடித்த நடிகை கிரண் மற்றும் புன்னகை மன்னன் படத்தில் நடித்த ரேகா உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதால், ரசிகர்களுக்கு இந்த சீசனில் உலக நாயகன் கமல் குறித்து ஏகப்பட்ட ரகசிய தகவல்கள் எல்லாம் தெரிய வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அம்மா நடிகை

அம்மா நடிகை

50 வயதாகும் நடிகை ரேகா, ரோஜா கூட்டம் படம் முதல் அம்மா நடிகையாக நடித்து வருகிறார். ஹரிஷ் கல்யாணின் பியார் பிரேமா காதல், தர்மபிரபு, ஜி.வி. பிரகாஷின் 100% காதல், சந்தானத்தின் டகால்டி என ஏகப்பட்ட படங்களில் ரீசன்ட்டாக நடித்துள்ளார். மேலும், சசிகுமாரின் ராஜவம்சம், குஸ்கா உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X