For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பப்பி த்ரில்லிங் பைக் கிஸ்… யூடியூபில் ட்ரெண்டான ட்ரெய்லர்

  |
  கல்யாணத்துக்கு முன்னாடி கசமுசா தப்பில்ல !! | SAMYUKTHA HEDGE | V-CONNECT | FILMIBEAT TAMIL

  சென்னை: யோகி பாபு நடிக்கும் பப்பி திரைப்படத்தின் ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அதில் ஒரு கல்லூரி வகுப்பறையில் மூன்று நண்பர்களுக்கு இடையே நடக்கும் கசமுசா கலாட்டா பற்றின விவாதம் தான் இடம்பெற்றிருந்தது. அந்த காட்சியானது, சில இளைஞர்களுக்கு தாங்கள் தினசரி சந்திக்கும் ஒரு சூழலை அப்படியே படம் பிடித்து காட்டியது போல இருக்கிறது. அந்த ட்ரெய்லரை யூடியூபில் இதுவரையிலும் 1.7 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

  வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கோமாளி, எல்.கே.ஜி திரைப்படங்களைத் தொடர்ந்து ஒரு கலகலப்பான இளைஞர்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் பப்பி படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் நட்டு தேவ் எனும் முரட்டு சிங்கள். தரன் இசையமைப்பில் தீபக் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங் பணிகளை கையாண்டுள்ளார் ரிச்சர்ட்.

  Puppy Tamil movie Trailer has been viewed 1.6 million viewers

  வனமகன், போகன் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருண் கமல் இந்த பப்பி திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஜோடியாக நடிக்கும் சம்யுக்தா ஹெக்டே இப்படம் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமாகிறார்.

  சினிமாவில் ஒரே மாதிரியான கேரக்டர் நடிப்பது ரொம்பவே போர் - காளி வெங்கட்சினிமாவில் ஒரே மாதிரியான கேரக்டர் நடிப்பது ரொம்பவே போர் - காளி வெங்கட்

  இன்றைய சூழ்நிலையில், யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்ற அளவிற்கு கிட்டத்தட்ட வெளியாகும் அனைத்து படங்களிலுமே யோகி பாபு கண்டிப்பாக இருப்பார். படத்தின் கதாநாயகன் யாராக இருந்தாலும் யோகி பாபு அந்த படத்தில் நடிக்கிறார் என்றால் அதற்காகவே அந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று அவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

  Puppy Tamil movie Trailer has been viewed 1.6 million viewers

  ஆண்டுக்கு சுமார் 15 படங்களிலாவது நடித்து விடுகிறார் யோகி பாபு. இப்போது அடை மழை யோகி பாபு திரும்பும் பக்கம் எல்லாம் அடிக்கிறது. பப்பி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. அனிமேஷன் செய்யப்பட்ட போஸ்டரில் சில சர்ச்சைகளும் ஏற்பட்டு பரபரப்பானது.

  இந்த நிலையில், தற்போது பப்பி படத்தின் ஒரு காட்சி யூடியூபில் வெளியாகி ரசிகர்களை, குறிப்பாக இளைஞர்களை கவர்ந்து வருகிறது. யூடியூபில் வெளியான ஒரே நாளில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் இந்த போஸ்ட்டை பார்வையிட்டுள்ளனர்.

  அந்த காட்சி ஒரு கல்லூரி வகுப்பறையில் மூன்று நண்பர்களுக்கு இடையே நடக்கும் கசமுசா கலாட்டா பற்றின விவாதம் தான். இந்த காட்சியில் இரண்டு நண்பர்களுக்கு இடையில் இருப்பவர் தான் படத்தின் இயக்குனர் முரட்டு சிங்கள். மிகவும் நகைச்சுவையாக இருக்கும் இந்த காட்சி வில்லங்கத்தனமாகவும் இருக்கிறது. சில இளைஞர்களுக்கு தாங்கள் தினசரி சந்திக்கும் ஒரு சூழலை அப்படியே படம் பிடித்து காட்டியது போல இருக்கிறது.

  வெளியிடப்பட்ட ஒரே நாளில் அதிக வியுவர்ஸ் கிடைத்ததால், படத்திற்கான ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு ரசிகர்களின் குறிப்பாக இளைஞர்களின் வருகை நிச்சயம் திரையரங்குகளை மூழ்கடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  English summary
  The trailer of the movie 'Puppy' starring Yogi Babu was released last week. The footage in the trailer is just like today's youngsters, capturing an environment that they encounter on a daily basis. The trailer has been viewed by 1.7 million people on YouTube so far.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X