»   »  புறம்போக்கு என்கிற பொதுவுடைமை... எமலிங்கம் விஜய் சேதுபதி பேசுகிறார்!

புறம்போக்கு என்கிற பொதுவுடைமை... எமலிங்கம் விஜய் சேதுபதி பேசுகிறார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படம் வரும் மே 15-ம் தேதி வெளியாகிறது.

விஜய் சேதுபதி, ஆர்யா, ஷாம், கார்த்திகா நடிப்பில் யூடிவி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் பைனரி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை'.


பல முன்னணி நடிகர்கள் இணைந்திருக்கும் இப்படம் மே 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.


எமலிங்கம்

எமலிங்கம்

படத்தில் தனது கதாபாத்திரத்தைப் விஜய் சேதுபதி பற்றி கூறும் பொழுது, "இப்படத்தில் நான் ‘எமலிங்கம்' என்ற ரயில்வே தொழிலாளியாக வருகிறேன். நகரும் ரயில் வண்டியின் ஓசையும், ரயில்வே தொழிலாளியின் பரபரப்பும் என்னுள் அடங்கவே இல்லை. வேறு எந்த கதாநாயகனும் செய்யாத கதாப்பாத்திரம் என்று நான் தைரியமாக சொல்வேன்.


வாழ்நாளில் நல்ல பாத்திரம்

வாழ்நாளில் நல்ல பாத்திரம்

எமலிங்கம், ரசிகர்கள் அதிகம் கண்டிடாத ஒரு கதாப்பாத்திரமாக இருக்கும். எனது வாழ்நாளில் நான் நடித்த நல்ல கதாப்பாத்திரங்களில் ஒன்றை இக்கதாப்பாத்திரம் நிலைக்கும்.

இந்தக் கதாப்பாத்திரத்திற்காக பிரத்யேக பயிற்சி என்றும் ஏதும் எடுக்கவில்லை. உண்மையை சொல்லப் போனால் நடிப்பு என்பது அந்தக் கதாப்பாத்திரத்தின் குணாதிசயங்களையும், பின்புலத்தை முழுமையாக உணர்ந்தால் போதுமானது.


எடை கூட்டினேன்

எடை கூட்டினேன்

எமலிங்கம் என்ற கதாப்பாத்திரத்தின் புதுமைக்காக சற்றே உடல் எடையை கூட்ட வேண்டியிருந்தது. மேலும் இக் கதாபாத்திரத்தை புரிந்துக் கொள்ளும் வகையில் நன்கு விளக்கினார் இயக்குநர்.


எல்லோருக்கும் சம வாய்ப்பு

எல்லோருக்கும் சம வாய்ப்பு

‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை' படம் ஒரு வழக்கமான திரைப்படம் கிடையாது. ஆழமான சமூக கருத்தூன்றிய கதையம்சம் கொண்டது. நான், ஆர்யா, ஷாம், கார்த்திகா என அனைவரும் படப்பிடிப்பு நாட்கள் முத்ழுதும் இனிமையாக கழிந்தது. படத்தில் யாருக்கு இவ்வளவு முக்கியத்துவம் என்று தெரியாது. ஜனநாதன் சாரின் கதை எங்களுக்கு என்று ஒரு இடம் வகுத்திருந்தது அதில் நன்றாக நடிக்கவும் இடம் வகுத்திருந்தது," என்றார்.


English summary
SP Jananathan's Purambokku Engira Pothuvudamai is releasing on May 15th worldwide.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil