ஆர்யா-விஜய் சேதுபதியின் 'புறம்போக்கு' – பொங்கலன்று 'பட்டா' போடுகிறார்கள்!
நடிகர் விஜய் சேதுபதி, ஆர்யா இணைந்து நடித்துவரும் புதிய திரைப்படம் ‘புறம்போக்கு'.‘இயற்கை', ‘பேராண்மை' உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இப்படத்தை இயக்கி வருகிறார்.
கோ' படத்தில் அறிமுகமான கார்த்திகா நாயர் நாயகியாக நடிக்கிறார். நடிகர் ஷாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘இந்தப் படத்தை யுடிவியுடன், எஸ்.பி.ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸும் சேர்ந்து தயாரிக்கிறது.
'புறம்போக்கு' படத்தை பற்றி இயக்குனர் ஜனநாதன் சொல்வதை மேற்கொண்டு படியுங்களேன்.

ஆர்யா – விஜய் சேதுபதி
அரசியல் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படத்தில் ஆர்யா சமூக செயல்பாட்டாளராகவும், நிதி ஆலோசகராகவும் நடிக்கிறார். விஜய் சேதுபதி ரயில்வே தினக்கூலியாக நடித்து வருகிறார்.

சிறைச்சாலை
சிறை சாலை என் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே இருந்து உள்ளது என்றால் மிகை ஆகாது.என் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்களும் நமது சரித்திரத்தில் இருந்து எடுக்கப் பட்டதுதான்.

சிறையில் சரித்திரம்
'சிறையில் உள்ள எல்லோருமே குற்றவாளிகள் அல்ல, நமது சரித்திரத்தின் பெரும் அத்தியாயங்கள் சிறை சாலையில் தான் அரங்கேறியுள்ளது. மகாத்மா காந்தி , நெல்சன் மண்டேலா போன்ற மாபெரும் தலைவர்கள் சிறைசாலையில் இருந்து தான் தங்களது வெற்றி சரித்திரத்தை துவங்கினர்.

ஆர்யா யார்?
சுதந்திர போராட்ட காலத்தில் மதுரையில் பிறந்து பின்னர் ஆந்திராவில் வாழ்ந்த வரலாற்று நாயகன் பாலுவின் பெயர்தான் ஆர்யாவுக்கு சூடப்பட்டு உள்ளது.

விஜய் சேதுபதி
முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் கதா பாத்திரத்துக்கு யமலிங்கம் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

கார்த்திகாவின் சரித்திரம்
சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு ஆற்றிய தமிழகத்தின் புரட்சி வீராங்கனை வேலு நாச்சியார் அவர்களின் பாசறையில் முக்கிய பங்கு வகித்து , பின்னர் ஆங்கிலேயர்களின் ஆயுத கிடங்கை மனித வெடிகுண்டாக மாறி அழித்த குயிலின் பெயர் கார்த்திகாவுக்கு வைக்கப்பட்டுள்ளது.

மெக்கல்லே ஷ்யாம்
ஆங்கிலேயர் காலத்தில் அவர்களது கல்வி முறையை அறிமுக படுத்தியவரும், ஆங்கிலேயர்களின் கடுமையான தண்டனை முறையை அறிமுகபடுத்தியவருமான மெக்கலேவின் பெயர் ஷ்யாமுக்கும் சூட்டியுள்ளோம் என்கிறார் இயக்குநர் ஜனநாதன்.

பரபரப்பான படப்பிடிப்பு
படப்பிடிப்பு ஏற்கெனவே ஹிமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரா ஆகிய இடங்களில் நடைபெற்றன. இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் பிரமாண்டமான சிறைச்சாலை செட் அமைத்து நடைபெற்று வருகிறது.

பொங்கலுக்கு ரிலீஸ்
தற்போது இந்தப் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டதாம். எனவே, படத்தை பொங்கல் பண்டிகை விருந்தாக படத்தை ரிலீஸ் செய்ய தீர்மானித்துள்ளதாக யுடிவியின் செயல் அதிகாரி தனஞ்செயன் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அதற்கு முன்பாக நவம்பர் மூன்றாவது வாரத்தில் படத்தின் ஆடியோவை ரிலீஸ் செய்ய திட்டுமிட்டுள்ளார்களாம்.


Click it and Unblock the Notifications











