twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புரந்தரதாஸர் ரூபத்தில் வந்த ரஜினி..!

    By Chakra
    |

    பெங்களூர்: கர்நாடக இசையின் பிதா மகனாகக் கருதப்படுபவர் புரந்தரதாஸர். கன்னடத்திலும் சமஸ்கிருதத்திலும் கடவுள் விஷ்ணுவைப் போற்றி இவர் இயற்றிய பாடல்கள் காலத்தால் அழியாத காப்பியங்கள்.

    இவரது பெயரில் புரந்தரா சர்வதேச அறக்கட்டளை பெங்களூரில் இயங்கி வருகிறது. இதன் சார்பில் நடிகர் ரஜினிக்கு பாராட்டு விழா சமீபத்தில் நடந்தது.

    அதில் ரஜினி பங்கேற்க முடியாததால் அவரது நெருங்கிய நண்பரான ராஜ் பகதூர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் புரந்தரதாஸர் வடிவிலான ரஜினியின் ஓவியம் பரிசாக வழங்கப்பட்டது.

    அதில் பேசிய ராஜ் பகதூர், ஒரு விஷயம், நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ தெரியாது. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.

    இந்த அறக்கட்டளையின் செயலாளர் ஸ்வர்ணா மோகன் மிகத் தீவிரமான புரந்தரதாஸர் பக்தர். அவரது கனவில் புரந்தரதாஸர் பலமுறை தோன்றியுள்ளார். அதிலும் ஒருமுறை ரஜினிகாந்த் ரூபத்தில் புரந்தரதாஸர் தோன்றியுள்ளார்.

    ரஜினி கனவில் வந்தது கூட பெரிதல்ல. அவர் சர்ட்-பேண்ட் போட்டு தோன்றியிருக்கலாமே.. ஏன் புரந்தரதாஸர் ரூபத்தில் வர வேண்டும்?

    ரஜினிக்கும் புரந்தரதாஸருக்கும் என்ன சம்பந்தம்..?. இருக்கிறது, இருவருக்கும் சம்பந்தம் இருக்கிறது. ரஜினிகாந்த் ராகவேந்திரரின் பக்தர், புரந்தரதாஸரின் பக்தர். உண்மையான பக்தர். ரஜினி ஒரு சாதாரண மனிதன் அல்ல, நடிகன் மட்டுமல்ல. மகா மனிதன்.

    புரந்தரதாஸர் ரூபத்தில் ரஜினி வந்ததைக் கண்டு ஆச்சரியமும் பரவசமும் அடைந்த ஸ்வர்ணா மோகன் என்னைத் தொடர்பு கொண்டு இதை விளக்கியதோடு, ரஜினியை ஏதாவது ஒரு படத்தில், ஒரு காட்சியாலாவது புரந்தரதாஸர் வேடத்தில் நடிக்கச் சொல்லுங்கள் என்றார்.

    நானும் இதை ரஜினியிடம் கூறினேன். இதுவரை அது போன்ற வேடத்தில் தோன்றுவதற்கான வாய்ப்பு வரவில்லை. அந்த வாய்ப்பு நிச்சயம் வரும். அதற்கான ஆசிர்வாதத்தை புரந்தரதாஸர் நிச்சயம் ரஜினிக்கு வழங்குவார் என்றார் ராஜ் பகதூர்.

    தனக்கு வந்த கனவின் காரணமாக ரஜினியின் உருவத்தை ஒத்த புரந்தரதாஸர் ஓவியத்தை வரைந்து அதை ரஜினிக்கே பரிசளிக்க முடிவு செய்து இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார் ஸ்வர்ணா மோகன்.

    இந்த ஓவியம் ராஜ் பகதூரிடம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஒன் இந்தியா சார்பில் மனித வள மேம்பாட்டு அதிகாரி கே.மகேஷ் பங்கேற்றார்.

    English summary
    Bangalore based Sri Purandara International Trust facilitated actor Rajinikanth recently. Raj Bahadur, a close friend of the actor received the award on behalf of Rajinikanth. Founder President of the trust Mohan Kumar and Secreatary Suvarna Mohan were present on the occasion.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X