படம் ஓடுனாதான் அது பான் இந்தியா.. ‘விக்ரம் வேதா’ இயக்குநர்களின் அடுத்த பிளான் என்ன?

சென்னை: பான் இந்தியா படங்கள் சமீப காலமாக டிரெண்டாகி வரும் நிலையில், அதுதொடர்பான கேள்விக்கு இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி அளித்துள்ள பதில் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

விஜய்சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற நிலையில், பாலிவுட்டில் அதே படத்தை ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் சைஃப் அலி கானை வைத்து இயக்கி உள்ளனர்.

சமீபத்தில் இவர்கள் திரைக்கதையில் உருவான சுழல் வெப்சீரிஸ் பாராட்டுக்களை அள்ளி வரும் நிலையில், அவர்கள் யூடியூப் சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டி டிரெண்டாகி வருகிறது.

கணவன் மனைவி

கணவன் மனைவி

ஆசியாவிலேயே கணவனும் மனைவியுமாக சேர்ந்து படம் எடுப்பது தமிழ்நாட்டில் தான் என்றும் அது நம்ம விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் - காயத்ரி தான்னு சொல்றாங்களே.. அது உண்மையா என்கிற கேள்விக்கு, அவர்களே தெரியலைங்க வேற யாராவது கூட இருக்கலாம். நாங்களே இருந்தாலும் நல்லாத்தான் இருக்கும் என செம ஜாலியாக அந்த பேட்டியில் பேசி உள்ளனர்.

ரஜினிகாந்துக்கு படம்

ரஜினிகாந்துக்கு படம்

நடிகர் ரஜினிகாந்துக்கு படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தால் என்ன மாதிரியான படம் பண்ணுவீங்க என்கிற கேள்விக்கு, எங்கம்மா கூட எனக்கு இவ்ளோ பிரெஷர் கொடுக்கல, ரஜினி சார், கமல் சார் படங்களை பண்ணனும்னு யாருக்குத் தான் ஆசை இருக்காது. ஆனால், அவர்களுக்கான கதையை முதலில் நாங்கள் பிடிக்கணும், அந்த லக் இருக்கணும், அப்படியெல்லாம் கிடைச்சா ரஜினியை திரையில் செம கெத்தாக காட்டினாலே போதும், மற்றதை ரசிகர்கள் பார்த்துக் கொள்வார்கள் என புஷ்கர் பக்காவாக பதில் அளித்தார்.

விஜய் அஜித்

விஜய் அஜித்

அதே போல விஜய் அஜித் படங்கள் பண்ணுவீங்களா என்கிற கேள்விக்கும் அதே பதிலை கொடுத்த இயக்குநர்கள் அவங்களுக்குத் தீனி போடுற கதையை ரெடி பண்ணிட்டுத் தான் அந்த பிளானையே போடணும் எனக் கூறினர். மேலும், அதிகமாக புஷ்கருக்குத் தான் கோபம் வரும் என்றும், எப்போதாவது காயத்ரி கோபப்பட்டால், செட்டே ஆடிப் போயிடும் என்றும் கூறினர்.

படம் ஓடுனா தான்

படம் ஓடுனா தான்

கடைசியாக பான் இந்தியா படம்னு சொல்றாங்களே, அதை பத்தி உங்களுடைய கருத்து என்னன்னு கேட்க, பல்வேறு இந்திய மொழிகளில் படம் எடுத்து டப்பிங் செய்வது பெரிய விஷயமில்லை. இந்தியா முழுவதும் அந்த அந்த மாநில ரசிகர்கள் அந்த படத்தை பார்த்து ரசித்தால் மட்டுமே அது பான் இந்தியா படம் என்று சொல்ல முடியும் என தங்களது கருத்துக்களை முன் வைத்தனர்.

Recommended Video

Seenu Ramasamy | Gayathri க்கு இந்த படத்துல National Award கிடைக்கும் | *Interview
அடுத்த பிளான்

அடுத்த பிளான்

விக்ரம் வேதா தமிழ், விக்ரம் வேதா இந்தி, சுழல் வெப்சீரிஸ்க்கு பிறகு அடுத்ததாக தமிழில் எப்போ படம் பண்ணுவீங்க யாரு ஹீரோ என்கிற கேள்விக்கு இப்போதைக்கு ஒரு கதை லாக் ஆகியிருக்கு. தமிழில் பண்ணனும் தான் ஆசை இருக்கு. ஆனால், அது எப்படி எங்கே போய் முடியப் போகிறது என்பது கூடிய விரைவில் தெரிந்து விடும் என இருவரும் கூறியுள்ளனர். இந்தி விக்ரம் வேதா படம் வெற்றியடைய அதற்கான புரமோஷன் வேலைகளை இருவரும் ஆரம்பிக்க உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X