twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Vikram Vedha Twitter Review: இந்தியில் சாதித்தார்களா புஷ்கர் காயத்ரி.. விக்ரம் வேதா எப்படி இருக்கு?

    |

    சென்னை: ஹ்ரித்திக் ரோஷன், சைஃப் அலி கான், ராதிகா ஆப்தே நடிப்பில் இந்தியில் உருவாகி உள்ள விக்ரம் வேதா படத்தை இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரியே இயக்கி உள்ளனர்.

    பொன்னியின் செல்வன் படத்துக்கு போட்டியாக செப்டம்பர் 30ம் தேதி இந்த படமும் வெளியாகி இருக்கு.

    தமிழில் கிடைத்த வெற்றியை போலவே விக்ரம் வேதா இந்தி படத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளதா என்பதை ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் மூலம் இங்கே பார்ப்போம்..

    பொன்னியின் செல்வன் வெற்றி..ஒத்தை ஆளாக கெத்து காட்டிய சாதித்த மணிரத்னம்..சமூக வலைதளங்களில் பாராட்டு பொன்னியின் செல்வன் வெற்றி..ஒத்தை ஆளாக கெத்து காட்டிய சாதித்த மணிரத்னம்..சமூக வலைதளங்களில் பாராட்டு

    வெறித்தனம் காட்டும் விக்ரம் வேதா

    வெறித்தனம் காட்டும் விக்ரம் வேதா

    இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் தமிழில் வெளியான விக்ரம் வேதா படத்தில் விஜய்சேதுபதி, மாதவன் நடித்து இருந்தனர். அந்த படத்தை பார்த்து பிடித்துப் போன ஹ்ரித்திக் ரோஷன் இந்தியில் ரீமேக் செய்ய முடிவெடுத்து அதே இயக்குநர்களை வைத்தே படத்தை உருவாக்கி உள்ளார். இன்று வெளியாகி உள்ள விக்ரம் வேதா படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

    பிரேம் குமார் வாழ்த்து

    பிரேம் குமார் வாழ்த்து

    விக்ரம் வேதா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கதைக்கு செம ட்விஸ்ட் கொடுத்த பிரேம்குமார் விக்ரம் வேதா இந்தி ரிலீஸை முன்னிட்டு தனது ஃபேவரைட் இயக்குநர்களான புஷ்கர் காயத்ரிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    பைசா வசூல்

    பைசா வசூல்

    விக்ரம் வேதா படத்தின் முதல் பாதி பைசா வசூல் என்றும் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் சைஃப் அலி கான் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் நடித்து மிரட்டி உள்ளனர் என படத்தின் முதல் பாதியை பார்த்து விட்டு ரமேஷ் பாலா தனது விமர்சனத்தை கொடுத்துள்ளார்.

    ராக் சாலிட்

    ராக் சாலிட்

    இளம் வயது ஹ்ரித்திக் முதல் கேங்ஸ்டர் ஹ்ரித்திகாக மாறுவது வரை நடிப்பு அசுரனாக காட்சிக்கு காட்சி மிரட்டலை கொடுத்துள்ளார் என இந்த ரசிகர் ராக் சாலிட் பெர்ஃபார்மன்ஸ் என விக்ரம் வேதாவை கொண்டாடி உள்ளார். ஏகப்பட்ட ரசிகர்களும் படம் சூப்பர் என சொல்லி வருகின்றனர்.

    போர் அடிக்குது

    போர் அடிக்குது

    விக்ரம் வேதா படம் ஒரிஜினல் அளவுக்கு ரொம்ப நல்லா இல்லை. பல இடங்களில் போர் அடிக்குது. ஹ்ரித்திக் ரோஷன் மட்டுமே தனது நடிப்பால் காப்பாற்ற முயற்சித்தும் முடியவில்லை. வெறும் 2 மார்க் தான் என பிரபல விமர்சகர் சுமித் காடேல் படத்தை விளாசி உள்ளார்.

    English summary
    Pushkar Gayathri's Vikram Vedha Hindi Twitter Review is here. Hrithik Roshan, Saif Ali Khan and Radhika Apte done their part well, but so much lag in screenplay complaints raisedby the audience.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X