அந்த படம் சரியா ஓடலை.. அஜித்துடன் இணைய காத்திருக்கோம்.. இயக்குநரே சொல்லிட்டாருப்பா!

சென்னை: தமிழ் படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சிவா. இதையடுத்து அவர் நடிப்பில் வெளியான வா குவாட்டர் கட்டிங் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்படத்தை விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி இயக்கியிருந்தனர். 2010ல் வெளியான இப்படம் அன்றைய காலகட்டத்தில் தேவையில்லாத படமாக இருந்திருக்கிறது. ஆனால், என்னை சந்திக்கும் பலர் நல்ல படம் சார் என்று என்னிடம் கூறுவார்கள் என புஷ்கர் காயத்ரி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய பல சுவாரஸ்யமான விசயங்கள் வெளியாகியுள்ளன.

விக்ரம் வேதா படத்தின் வெற்றிக்கு பிறகு புஷ்கர் காயத்ரி தம்பதி இணைந்து சுழல் வெப் தொடரை இயக்கியிருந்தனர். அமேசான் பிரைமில் வெளியான இத்தொடர் அதிக பார்வையாளர்களை கவர்ந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து தற்போது சுழல் 2 வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே, புஷ்கர் காயத்ரி தம்பதி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது முதல் படம் குறித்தும் சினிமாவிற்குள் வந்த அனுபவம் குறித்தும் தெரிவித்தனர்.

ajith next movie update pushkar gayatri suzhal 2 2

ஓரம்போ: ஆர்யா, பூஜா, லால் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ஓரம் போ. தமிழ் சினிமாவிற்கு வித்தியாசமான கதைக்களம் தான். பிளாக் காமெடி வகைகளை சார்ந்த படம் என்ற குறிப்பிடலாம். இப்படத்தில் ரத்தம் இல்லை, சண்டை இல்லை ஜாலியான ஒரு கதையைத்தான் புஷ்கர் காயத்ரி இணைந்து இயக்கியிருப்பார்கள். இப்படத்திற்கு கூடுதல் பலமே தியாகராஜன் குமாரராஜாவின் எழுத்து மிகப்பெரிய பிளஸ் ஆக இருந்தது. 2007இல் வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ajith next movie update pushkar gayatri suzhal 2 2

வா குவாட்டர் கட்டிங்: தமிழ் படத்தை தொடர்ந்து சிவாவிற்கு மிகப்பெரிய நம்பிக்கையாக வந்த படம் குவாட்டர் கட்டிங். படத்தில் துளி அளவும் சென்டிமெண்ட் என்பதே கிடையாது. ஒரு இரவில் நடக்கும் கதையாக இருந்தாலும் ஜாலியா கலகலப்பாக இருக்கும். ஆனால், அன்றைய காலகட்டத்தில் ரசிகர்களை பெரிதளவில் கவரவில்லை. வழக்கமாக தமிழ்ப்படங்களில் வரும் க்ளிஷே காட்சிகள் எதுவும் இல்லாமல் எல் காமெடி என்ற ஒரே ஒரு இலக்கை நோக்கி கதை பயணிக்க வைத்தது. சிவாவிற்கு வழக்கமாக கலாய்க்கும் கதாப்பாத்திரம் என்றாலும் இன்றைய தலைமுறைகள் அப்படத்தை கொண்டாடிவருகின்றனர்.

ajith next movie update pushkar gayatri suzhal 2 2

படத்தில் கதை இருக்கா: வா குவாட்டர் கட்டிங்கில் கதை இருக்கா என்று கேட்டால் இதுல மெசேஜ் என்ன? ஏண்டா மெசேஜ் மெசேஜ்னு அலையறீங்க? என்று ஒரே டயலாக்கில் முடிந்திருக்கும். விஜய் ரசிகர் என்ற போர்வையில் தன் நெஞ்சில் சுறா என பச்சை குத்திக்கொண்டு சிவா பண்ணும் லூட்டிகள் கலக்கல் ரகம் தான். புஷ்கர் காயத்ரி இயக்கிய 2 படங்களும் தோல்வியை தழுவினாலும், இன்றைக்கு ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்கும் படங்களில் வா குவாட்டர் கட்டிங் இடம்பிடித்துள்ளன.

படம் எடுப்பது ரிஸ்க்: சுழல் 2 வெப் தொடர் குறித்து பேசிய புஷ்கர் காயத்ரி தம்பதி, வா குவாட்டர் கட்டிங் படம் ஏன் ரசிகர்களை கவரவில்லை என்பதற்கான காரணத்தையும் தெரிவித்தனர். 2010ல் தமிழ் சினிமாவில் வித்தியாசமான மக்களை ரசிக்கும் படங்களின் எண்ணிக்கை குறைவு. கமர்ஷியல் படங்களின் எண்ணிக்கை அதிகம்.மாஸ் ஹீரோக்களுக்கான காலமாக இருந்தது. வா குவாட்டர் கட்டிங் மட்டும் இல்லை ஓரம் போ படம் எடுக்கும் போதும் ரிஸ்க் தான் இருந்தது. இந்த படங்களை மக்கள் ரசிப்பார்களா வெற்றி பெறுமா என்ற சந்தேகத்துடன் படத்தை இயக்கியிருந்தோம்.

ஒரு புது முயற்சி ட்ரை பண்ணுவோம் என்ற நோக்கம் இருந்தது. அடுத்தடுத்து படங்கள் ஓடவில்லை. இந்த படங்கள் கமர்ஷியலுக்குள்ளும் வராது. காமெடி படத்துக்குள்ளும் ஒட்டாது. அப்படி ஒரு படமாகத்தான் ஓரம் போ, வா குவாட்டர் கட்டிங் இருந்தது. ப்ளாக் காமெடி வகைகளை இன்று மக்கள் ரசிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியாக உள்ளது என புஷ்கர் காயத்ரி தெரிவித்தனர்.

ajith next movie update pushkar gayatri suzhal 2 2

அஜித் படம்: இந்நிலையில் அஜித்தை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதாவது, எங்களின் அடுத்த படத்தின் கதை தயாராக உள்ளது. மிகவும் தனித்துவமான, இதுவரை எடுக்கப்படாத ஒரு ஜானர். நகைச்சுவை, டிராமா, த்ரில்லர் என எதிலும் இந்தப்படத்தை அடக்க முடியாது. இந்த வருடம் அறிவிக்கப்பட்டு, அடுத்தாண்டு ரிலீசாகும் என தெரிவித்துள்ளனர். அஜித்துடன் பணியாற்ற ஆர்வமாக உள்ளது. ஆனால் இதுவரை எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை என தெரிவித்தனர்.

More from Filmibeat

Read more about: pushkar gayatri
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X