Allu Arjun: மனைவிக்கு முத்தம்.. காவல்துறை வாகனத்தில் ஏறுவதற்கு முன் அல்லு அர்ஜுன் எமோஷனல்!

ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது, அவரை காவல்துறையினர் காவல் துறை வாகனத்தில் அழைத்துச் சென்றனர். இதனால் அவர் கைது செய்யப்பட்டுவிட்டார் என்ற தகவல் காட்டுத்தீபோல பரவி வருகின்றது. தற்போது ஹைதராபாத் காவல்துறை கமிஷ்னர் சி.வி.ஆனந்த், அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதாக அறிவித்துள்ளார். இப்படியான நிலையில் காவல்துறை வாகனத்தில் ஏறுவதற்கு முன்னர், தனது மனைவி சினேஹா ரெட்டியின் கன்னத்தில் முத்தமிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த வாரம், டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் புஷ்பா 2. இந்தப் படம் ஒரு வாரத்தில் அதாவது ரிலீஸ் ஆன 7 நாளில் உலகம் முழுவதும் ரூபாய் 1067 கோடிகளை வசூல் செய்துள்ளது. படம் 6 நாளில் 1002 கோடிகளை வசூல் செய்து இந்திய அளவில் மிகக்குறைந்த நாட்களில் அதிக வசூல் குவித்த படம் என்ற சாதனையைப் படைத்தது. படத்தின் வெற்றி விழா மும்பையில் நேற்று அதாவது டிசம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது.

pushpa 2 allu arjun allu arjun arrest

படம் ரிலீஸ் ஆன 5ஆம் தேதி அதிகாலையில் இருந்து படத்திற்கு சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனால், ஹைதராபாத்தில் உள்ள மிகவும் புகழ் பெற்ற திரையரங்கமான சந்தியா திரையரங்கில் படம் பார்க்க ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் அல்லு அர்ஜுன் படம் பார்க்க, வந்ததால் ரசிகர்கள் இடையே நெரிசல் அதிகரித்தது. இதனால் ரேவதி என்ற ரசிகை, ரசிகர்களின் நெரிசலில் சிக்கி சந்தியா தியேட்டர் வாசலில் உயிரிழந்தார். மேலும் அவருடன் வந்திருந்த அவரது மகனுக்கும் அதிக காயங்கள் ஏற்பட்டதால், உயிருக்கு ஆபத்தான நிலையில், ரேவதியின் மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.

pushpa 2 allu arjun allu arjun arrest

அந்த நேரத்தில் அல்லு அர்ஜுன் படம் பார்க்க, வந்ததால் ரசிகர்கள் இடையே நெரிசல் அதிகரித்தது. இதனால் ரேவதி என்ற ரசிகை, ரசிகர்களின் நெரிசலில் சிக்கி சந்தியா தியேட்டர் வாசலில் உயிரிழந்தார். மேலும் அவருடன் வந்திருந்த அவரது மகனுக்கும் அதிக காயங்கள் ஏற்பட்டதால், உயிருக்கு ஆபத்தான நிலையில், ரேவதியின் மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.

pushpa 2 allu arjun allu arjun arrest

வழக்கு: இது தொடர்பாக தெலங்கானா காவல்துறை அல்லு அர்ஜுன் மற்றும் சந்தியா திரையரங்க உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. அதாவது, அல்லு அர்ஜுன் வரப்போவதாக எங்களுக்கு முன் அறிவிப்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த முன் அறிவிப்பினை அல்லு அர்ஜுனும் தெரிவிக்கவில்லை, சந்தியா திரையரங்க உரிமையாளரும் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டிருந்தது.

pushpa 2 allu arjun allu arjun arrest

கைது?: இந்த வழக்கு இன்று அதாவது டிசம்பர் 13ஆம் தேதி தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு ஆஜரான, நடிகர் அல்லு அர்ஜுனை, தெலங்கானா காவல்துறை, தங்களது காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இதனால் காவல்துறை அல்லு அர்ஜுனை கைது செய்துவிட்டதாக தகவல்கள் வேகமாக பரவி வருகின்றது. இப்படியான நிலையில், ஹைதராபாத் காவல்துறை கமிஷ்னர் சி.வி.ஆனந்த், அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதாக அறிவித்துள்ளார். இதனால் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

pushpa 2 allu arjun allu arjun arrest

முத்தம்: இந்நிலையில் காவல்துறை வாகனத்தில் அல்லு அர்ஜுனை ஏற்றுவதற்கு முன்னர், அல்லு அர்ஜுன் தேநீர் அருந்தினார். மேலும் அவருக்கு அருகில் அழுதுகொண்டு நின்றுகொண்டு இருந்த அவரது மனைவி சினேஹா ரெட்டிக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்து, பயப்படக்கூடாது, அழக்கூடாது எனக் கூறினார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவிவருகின்றது.

pushpa 2 allu arjun allu arjun arrest

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X