Allu Arjun: கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுன்.. மனுஷன் கூலாக காபி குடிச்சிட்டு இருக்காரே!
ஐதராபாத்: புஷ்பா 2 படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. இந்தப் படத்தின் ரிலீசுக்கு முந்தைய பிரீமியர் ஷோவில் படம் பார்க்க வந்த அல்லு அர்ஜுனின் ரசிகை ஒருவர் தாறுமாறான கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனால் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்ட நிலையில், உயிரிழந்தவர் குடும்பத்திற்கு அல்லு அர்ஜுன் நிவாரண உதவி அறிவித்திருந்தார்.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியாகியுள்ள புஷ்பா 2 படத்தின் முதல் பாகம் கடந்த 2021ம் ஆண்டில் வெளியாகி மிகச்சிறப்பாக அமைந்த நிலையில் தற்போது புஷ்பா 2 படம் சில தினங்களிலேயே அதைவிட இருமடங்கு வசூலை குவித்துள்ளது.

புஷ்பா 2 படம்: தற்போது அடுத்தடுத்து இந்த படத்தின் வெற்றி விழா கொண்டாட்டங்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக இந்த படத்திற்கு இந்திய அளவில் மிகப்பெரிய ப்ரோமோஷன்களை படக்குழுவினர் கொடுத்திருந்தனர். டெல்லி, மும்பை, பாட்னா, சென்னை, ஹைதராபாத், கொச்சி என படகுழுவினர் பல இடங்களில் படத்திற்கான ப்ரோமோஷன்களை செய்த நிலையில் படத்தின் ரிலீஸ்க்கு முந்தின நாள் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் படத்தின் பிரிமியர் ஷோ திரையிடப்பட்டது. இந்த ஷோவிற்கு அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழுவினர் முன்னறிவிப்பு இன்றி திடீரென வந்ததாக கூறப்படுகிறது.
பெண் பலியான சம்பவம்: இதனால் லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அவர்களை பார்க்க அங்கு குவிந்தனர். இதன்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு அதில் சாந்தி என்ற பெண் ஒருவர் தன்னுடைய ஒன்பது வயது மகனுடன் சிக்கிக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது இதில் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்பவர் மயங்கி விழுந்த நிலையில் அவரும் அவரது மகனும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அப்போது ரேவதி உயிரிழந்த நிலையில் அவரது மகன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து ரேவதியின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணமாக அல்லு அர்ஜுன் அறிவித்திருந்தார்.
அல்லு அர்ஜுன் கைது: இந்நிலையில் இந்த சம்பவத்தில் தற்போது அல்லு அர்ஜுன் மீது தெலங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதையொட்டி அவரது வீட்டிற்கு சென்று அவரை போலீசார் கைது செய்தனர். இதன் அடுத்தடுத்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது. போலீசார் அல்லு அர்ஜுனை அழைத்து செல்வதற்காக காத்திருந்த நிலையில் அல்லு அர்ஜுன் கூலாக காபி குடித்துக் கொண்டிருந்ததை இந்த வீடியோவில் பார்க்க முடிந்தது. மேலும் அவர் சற்று எமோஷனலாகி தன்னுடைய மனைவிக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்ததையும் இந்த வீடியோ வெளிக்காட்டியது.
அல்லு அர்ஜுன்மீது வழக்குப்பதிவு: தொடர்ந்து காவல்துறை வாகனத்திலேயே அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். முன்னதாக இந்த சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்ட அல்லு அர்ஜுன் இந்த சம்பவம் காரணமாக தன்னால் மட்டுமில்லாமல் தன்னுடைய படக்குழுவினராலும் புஷ்பா பட கொண்டாட்டங்களில் முழுமையாக ஈடுபட முடியவில்லை என்று தெரிவித்திருந்தார். அந்த அளவிற்கு தான் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரேவதியின் குடும்பத்தினருடன் தொடர்ந்து தாங்கள் உறுதுணையாக இருப்போம் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது அவர் இந்த சம்பவத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் சந்தியா திரையரங்கம், நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











