Allu Arjun: பெயில் இல்லைனா ஜெயில் உறுதி.. பலத்த பாதுகாப்பில் சிறைவளாகம்..பரபரப்பில் ஹைதராபாத்!
கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற ரசிகை உயிரிழந்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், அல்லு அர்ஜுன் இன்று அதாவது, டிசம்பர் 13ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர், கைது செய்யப்பட்டு, சிக்கடப்பள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இவர் மீது பதியப்பட்ட வழக்கிற்கு ஜாமீன் கிடைக்காது என சட்டவல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். இப்படியான நிலையில், அல்லு அர்ஜுன் வழக்கில் இன்று தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது. அல்லு அர்ஜுன் தரப்பில் இருந்து ஜாமீனுக்கு நீதிமன்றத்தில் முறையிடுவார்கள். நீதிமன்றம் அல்லு அர்ஜுனின் ஜாமீனை ரத்து செய்தால், அவர் சிறைக்குச் செல்வது உறுதியாகிவிடும்.
எனவே, ஜாமீன் மறுக்கப்படும் பட்சத்தில் அல்லு அர்ஜுன் சஞ்சல்குடா சிறைச்சாலையில் அடைக்கப்படுவார். இதனால் அதற்கான ஏற்பாடுகளையும் காவல்துறைத் தரப்பில் விரைந்து செய்து வருகின்றனர். குறிப்பாக தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் இருந்து சஞ்சல்குடா சிறை வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் மொத்த ஹைதராபாத்தும் மிகவும் பரபரப்பில் உள்ளது. மேலும் அல்லு அர்ஜுன் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைதண்டனை கிடைக்கும் எனவும் கூறப்படுகின்றது. இப்போது அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்றாலும், நீதிமன்றக் காவலில்தான் அவர் இருப்பார்.

புஷ்பா 2 திரைப்படம் கடந்த 5ஆம் தேதி உலகம் முழுவதும் ரீலீஸ் ஆனது. இந்தப் படத்தின் ப்ரீமியர் ஷோ டிசம்பர் 5ஆம் தேதி நள்ளிரவில் ஹைதராபாத்தில் இருக்கும் புகழ்பெற்ற தியேட்டரான சந்தியா தியேட்டரில் திரையிடப்பட்டது. ப்ரீமியர் ஷோவைக் காண அல்லு அர்ஜுனின் தீவிர ரசிகர்கள் ஆயிரக் கணக்கில் திரண்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து, அல்லு அர்ஜுன் சந்தியா தியேட்டருக்கு முன் அறிவிப்பு எதுவும் இன்றி, படம் பார்க்க வந்தார். இதனால், ரசிகர்கள் ஆரவாரத்தில், அல்லு அர்ஜுனை அருகில் பார்ப்பதற்காக அவர் வந்த காரினை நோக்கி முன்னேறினார்கள்.
நடந்தது என்ன? இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 35 வயதுடைய ரேவதி என்ற ரசிகை பரிதாபமாக, சந்தியா தியேட்டர் வாசலிலேயே, உயிரிழந்தார். மேலும் அவரது மகனும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் ரசிகை ரேவதியின் மரணத்திற்கு முன் அறிவிப்பு இல்லாமல் வந்த அல்லு அர்ஜுனும், அல்லு அர்ஜுன் படம் பார்க்க வருகின்றார் என்றத் தகவலைத் தெரிந்து கொண்ட பின்னர், சந்தியா தியேட்டர் ஓனரும்தான் காரணம் என தெலங்கானா காவல்துறை அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, முதல் குற்றப் பத்திரிகையும் பதிவு செய்யப்பட்டது

வழக்கு பிரிவு: அதில் இவர்கள் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 105, 118(1) red with 3/5 BNS ஆகிய பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவு 105 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் கிடைக்காது. அதேபோல் இந்த வழக்கில் அல்லு அர்ஜுன் மீது குற்றம் நீரூபிக்கப்பட்டால், அவருக்கு 5 முதல் 10 ஆண்டுகள் தண்டனைக் கிடைக்க வாய்ப்புள்ளது. அதேபோல், பிரிவு 118(1)-ன் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்தப் பிரிவின் கீழ் அல்லு அர்ஜுனுக்கு குறைந்த பட்சம் ஒன்று முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
14 நாட்கள் சிறை: இப்படியான நிலையில் வழக்கின் முதல் கட்ட விசாரணை இன்று தெலங்கானா நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகின்றது. இந்த விசாரணையின்போது, அல்லு அர்ஜுன் தரப்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் நிரஞ்சன் ரெட்டி, அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் கேட்பார். நீதிமன்றம் ஜாமீனை மறுக்கும் பட்சத்தில் அல்லு அர்ஜுன்14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் இருப்பார். இவரிடத்திலும், சந்தியா தியேட்டர் உரிமையாளரிடத்திலும் காவல்துறை விசாரணை நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











