Pushpa 2 Box Office: அட்வான்ஸ் புக்கிங்கே 100 கோடி.. புஷ்பா 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடி வரும்?

சென்னை: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் முதல் நாளே கங்குவா படத்தின் லைஃப் டைம் வசூலை முறியடித்து விடும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன. மேலும், அதைவிட அதிக வசூலையே அல்லு அர்ஜுனின் ஸ்டார்டம் முதல் நாளில் ஈட்டித் தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அலா வைகுந்தபுரமுலோ படத்திற்கு பிறகு இந்தியளவில் அல்லு அர்ஜுனின் மார்க்கெட் உயர்ந்துவிட்டது. புஷ்பா படத்தின் முதல் பாகம் மேலும், அவரை பான் இந்தியா நடிகராக மாற்றிய நிலையில், புஷ்பா 2 படத்துக்கு விஜய் மற்றும் ஷாருக்கானை விட அதிக சம்பளம் வேண்டும் என கொக்கிப் போட்டு இந்தியாவிலேயே அதிகமாக இதுவரை எந்தவொரு நடிகரும் வாங்காத அளவுக்கு 300 கோடி சம்பளத்தை அல்லு அர்ஜுன் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

pushpa 2 box office allu arjun box office 2

ஷாருக்கான் மற்றும் விஜய்யின் சம்பளம் அதிகபட்சமாக 275 கோடி வரை உள்ளது குறிப்பிடத்தக்கது. புஷ்பா 2 திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் குறித்த கணிப்புகள் வெளியாகி உள்ளன.

அட்வான்ஸ் புக்கிங்கிலேயே 100 கோடி: சூர்யாவின் கங்குவா திரைப்படம் 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 2000 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை உலகளவில் 110 கோடி ரூபாய் தான் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மிகப்பெரிய நஷ்டத்தை அந்த படம் சந்தித்த நிலையில், அந்த படத்தில் பணியாற்றிய தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள புஷ்பா 2 படத்துக்கு பெரிதாக ஹைப் இருக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அல்லு அர்ஜுனின் ஸ்டார்டம் காரணமாக அட்வான்ஸ் புக்கிங்கிலேயே இதுவரை 100 கோடி வசூல் செய்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பையே படக்குழுவினர் அதிரடியான போஸ்டரை விட்டு அறிவித்துள்ளனர்.

ஆர்ஆர்ஆர் சாதனையை முறியடிக்குமா?: இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் அதிகபட்சமாக முதல் நாளில் 223 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், அந்த படத்தின் முதல் நாள் கலெக்‌ஷனை புஷ்பா 2 முதல் நாளிலேயே முறியடிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிகபட்சமாக 225 கோடி வசூலை புஷ்பா 2 திரைப்படம் முதல் நாளில் ஈட்டும் என்றும் பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

pushpa 2 box office allu arjun 2

1500 கோடி டார்கெட்: அதே போல புஷ்பா 2 திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி அதிக வசூலை ஈட்டிய பிரபாஸின் கல்கி 2898 ஏடி படத்தின் வசூலையும் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபாஸ் நடித்த கல்கி திரைப்படம் 1100 கோடி வசூல் செய்த நிலையில், 1500 கோடி வரை புஷ்பா 2 வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தளவுக்கு படம் வொர்த்தாக இருந்தால் பாக்ஸ் ஆபிஸில் புஷ்பா 2 ரெக்கார்டை முறியடிக்க மற்ற படங்களுக்கு ரொம்ப வருடங்கள் ஆகும் என்றும் கூறுகின்றனர். புஷ்பா 2 மட்டுமின்றி புஷ்பா 3 படமும் வெளியாகும் என்கிற தகவல் லீக்கானதில் இருந்தே மேலும், ஹைப் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் நிறுவனம் புஷ்பா 2 படத்தை ரிலீஸ் செய்வது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X