Allu Arjun: வெறித்தனம்.. நேரடியாக தமிழ் படத்தில் நடிக்கும் அல்லு அர்ஜுன்.. இயக்குநர் யார் தெரியுமா?

சென்னை: அல்லு அர்ஜுன் தெலுங்கு சினிமாவில் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தினைக் கொண்டவராக இருந்தார். நடனம், சண்டைக் காட்சிகள், தனது கதாபாத்திரங்களுக்காக மெனக்கெடுவது என அனைத்திலும் சிறந்து விளங்கிய இவர் சிறந்த நடிகராக குறிப்பாக தொடர்ந்து ஹிட் கொடுக்கும் நடிகராக மாறியுள்ளார். இவரது நடிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படத்தின் மூலம் இவர் பான் இந்தியா ஸ்டாராக மாறிவிட்டார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் ரசிகர்கள், படத்திற்காக ஆவலாக காத்துக் கொண்டு உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அல்லு அர்ஜுன் நேரடி தமிழ் படத்தில் நடிப்பதாக உறுதி கொடுத்துள்ளார்.

இயக்குநர் சுகுமாறன் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் புஷ்பா. படம் செம்மரக் கடத்தலில் ஈடுபடுபவர்களை மைய்யமாகக் கொண்டு எடுக்கப்பட்டதால், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதுமட்டும் இல்லாமல், செம்மரக் கடத்தல்கள் தொடர்பாக விரிவாக படம் பேசியது படத்தின் வெற்றிக்கு பெரும் காரணமாக அமைந்தது.

pushpa 2 allu arjun nelson dheelipkumar

இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாகம் இன்னும் 10 நாட்களில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், படக்குழுவினர், வேகமாக படத்தின் ப்ரமோஷன் வேலைகளை செய்து வருகின்றனர். இது மட்டும் இல்லாமல், ரசிகர்கள் தரப்பில் புஷ்பா 2 படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருப்பதால் படக்குழுவினர் செல்லும் இடங்களில் எல்லாம் பெரும் ரசிகர்கள் பட்டாளம் திரண்டு விடுகின்றனர்.

நேரடி தமிழ் படம்: இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற படத்தின் ப்ரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் நெல்சன் பேசும்போது அல்லு அர்ஜுனை நேரடியாக தமிழ் படத்தில் நடிக்கச் சொல்லி கேட்டுக் கொண்டார். அவர் இதுபோலக் கேட்டதும் ரசிகர்கள் ஆரவாரமாகக் கத்தினர். மேலும் இயக்குநர் நெல்சன் பேசும்போது, ஒருமுறை அல்லு அர்ஜுன் சாரைச் சந்திக்க நான் போயிருந்தேன். அப்போது அவரிடம் பேசும்போது, நான் ஷாக் ஆகிட்டேன். அவர் கொஞ்சம் கூட தடங்கல் இல்லாமல் தமிழ் பேசினார்.

நெல்சன்: எனக்கு தோன்றுவது ஒன்றுதான். அதாவது, அல்லு அர்ஜுன் சார் நேரடியாக தமிழில் படம் நடிக்க வேண்டும். அதுவும் அவரே தமிழ் பேசி நடிக்கவேண்டும். வேறு யாரும் டப் செய்யக் கூடாது. அதேபோல் ஹிந்தியிலும், மலையாளத்திலும் என அவரே நேரடியாக பேசி நடிக்க வேண்டும். பாட்னாவில் டிரைலர் ரிலீஸுக்கு வந்த கூட்டத்தைப் பார்த்து மிரண்டுவிட்டேன்" எனக் கூறினார். இவரது பேச்சினைப் பார்க்கும்போது, அல்லு அர்ஜுன் நெல்சன் இயக்கத்தில் நடிக்க கதை கேட்டுள்ளார் என ரசிகர்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.

தமிழ் மண்: மேலும் இந்த நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுன் பேசும்போது ரசிகர்கள் அவரை தெலுங்கில் பேசச் சொன்னார்கள். ஆனால், அவரோ நான் தமிழ் மண்ணின் மீது நிற்கின்றேன். அதனால் நான் தமிழில்தான் பேசுவேன். எனக்கு தமிழ் தெரியும்போது தமிழ் மண்ணில் இருந்து கொண்டு என்னால், தெலுங்கில் பேசமுடியாது. தமிழில்தான் பேசுவேன் எனக் கூறியது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X