சோகத்தில் அல்லு அர்ஜுன்.. சந்தோஷத்தில் புஷ்பா 2 படக்குழு.. இந்தி பெல்ட்டில் இன்னுமொரு இமாலய சாதனை!

மும்பை: புஷ்பா 2 திரைப்படம் 1600 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாகுபலி 2 வசூல் சாதனையை விரைவில் முறியடிக்கும் முடிவோடு சென்றுக் கொண்டிருக்கிறது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவை விட இந்தி ரசிகர்கள் வட இந்தியாவில் புஷ்பா 2 படத்தைக் கொண்டாடி வருகின்றனர். இதுவரை எந்தவொரு இந்தி படமும் செய்யாத வசூல் சாதனையை முதன் முறையாக புஷ்பா 2 செய்துள்ளதாக தற்போது படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சந்தியா தியேட்டரில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியான சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட சிறைக்குச் சென்றார். அவருக்கு தெலங்கானா அரசு ஜாமீன் வழங்கிய நிலையில், தற்போது அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தெலங்கானா போலீஸ் வழக்கு தொடரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

pushpa 2 pushpa 2 box office allu arjun

மேலும், இன்று நடிகர் அல்லு அர்ஜுனை மீண்டும் காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக அல்லு அர்ஜுனின் தனி பாதுகாவலரான பவுன்சர் அந்தோணி என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சோகத்தில் அல்லு அர்ஜுன்: நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை சக்சஸ் பார்ட்டி வைத்துக் கொண்டாட முடியாமல் பெண் உயிரிழந்த வழக்கில் சிக்கி சிறைக்குச் சென்று வந்தது மட்டுமின்றி தெலங்கானாவின் முதலமைச்சர் எதிர்ப்பையே சம்பாதித்துக் கொண்டு அவதிப்பட்டு வருகிறார்.. தொடர்ந்து அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வைல்டு ஃபையராக மாறி ரேவந்த் ரெட்டிக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வர அல்லு அர்ஜுன் தான் சிக்கல்களை சந்தித்து வருகிறார்.

பவுன்சர் கைது: அல்லு அர்ஜுனிடம் இன்று மீண்டும் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடைபெற்றது. சந்தியா தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் வர காரணமாக இருந்தது யார் என்றும் அதற்கான ஏற்பாடுகளை செய்தது யார் என்றும் விசாரித்த நிலையில், அவரது மெய்க்காப்பாளரான அந்தோனியை காவல் துறை கைது செய்துள்ளது. இது அல்லு அர்ஜுனை மேலும், வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியில் இமாலய சாதனை: இதுவரை இந்தி பெல்ட்டில் வெளியான எந்தவொரு படமும் 700 கோடி ரூபாய் வசூலை அடைந்ததில்லை என்றும் முதல் முறையாக 704.25 கோடி ரூபாய் வசூலை இந்தி பெல்ட்டில் புஷ்பா 2 வசூல் செய்துள்ளதாக தற்போது புஷ்பா படக்குழு பாக்ஸ் ஆபிஸ் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. விரைவில் பாகுபலி 2 படத்தின் 1800 கோடி ரூபாய் வசூலை புஷ்பா 2 முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கல் படம் போல சீனாவிலும் இந்த படம் ரிலீஸ் ஆனால், 2000 கோடி வசூலை கடக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர்.

pushpa 2 pushpa 2 box office allu arjun

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X