Rashmika mandanna: நாளை ரிலீசாகும் புஷ்பா 2 படம்.. ரசிகர்களை ஆட்டிப்படைக்கும் ராஷ்மிகா மந்தனா!

சென்னை: அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ள புஷ்பா 2 படம் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் மாஸ் காட்டி வருகின்றனர். அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சுகுமார் உள்ளிட்டவர்கள் பறந்து பறந்து இந்த படத்தின் ப்ரோமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மும்பை, சென்னை, பாட்னா, கொச்சி, ஹைதராபாத் என மிகப் பெரிய அளவிலான பிரோமோஷங்களை படக்குழுவினர் புஷ்பா 2 படத்திற்கு கொடுத்துள்ளனர். செல்லும் இடமெங்கிலும் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் ஜோடியை சேர்த்து பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

allu arjun rashmika mandanna pushpa 2 movie

புஷ்பா 2 படம்: நடிகை ராஷ்மிகா மந்தனா அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் பேனர்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் இவரை அடுத்தடுத்து பார்க்க முடிகிறது. சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார் ரஷ்மிகா மந்தனா. தன்னை நம்பி படம் பார்க்க வரும் ரசிகர்களை தன்னுடைய நடிப்பாலும் கவர்ச்சியாலும் தாக்குதலுக்கு உள்ளாக்கி வருகிறார். புஷ்பா படமே இவரை பான் இந்தியா படமாக மாற்றியுள்ளது. இந்த படத்தில் இவர் காட்டிய தாராளமான கவர்ச்சி தற்போது புஷ்பா 2 படத்திலும் தொடர்ந்து வருகிறது.

allu arjun rashmika mandanna pushpa 2 movie

ராஷ்மிகா மந்தனா தாராளம்: தேவிஸ்ரீ பிரசாத் இசையில் புஷ்பா 2 படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி வரும் சூழலில் ஒவ்வொரு பாடலிலும் ராஷ்மிகா மந்தனாவின் தாராளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த படத்திற்காக அடுத்தடுத்து பாட்னா, சென்னை, ஹைதராபாத், மும்பை, கொச்சி என படக்குழுவினருடன் பங்கேற்று வருகிறார் ராஷ்மிகா மந்தனா. படத்தில் காட்டிய தாராளம் போதாது என்று அடுத்தடுத்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிகளிலும் இவர் ரசிகர்களை கவரும் வகையில் உடைகளை அணிந்து வருகிறார். மும்பையில் கருப்பு நிற புடவையில் வந்த ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுக்கு தாறுமாறாக கவர்ந்திருந்தார்.

allu arjun rashmika mandanna pushpa 2 movie

அல்லு அர்ஜுன் -ராஷ்மிகா ஆட்டம்: மேலும் மேடையில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஆட்டமும் போட்டிருந்தார். இந்நிலையில் இவையெல்லாம் போதாது என்று தற்போது ஃபோட்டோஷூட் எடுத்து அதன் புகைப்படங்களையும் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதிலும் அவர் கையில் எடுத்தது என்னவோ புடவைதான். புடவையில் தான் அதிகமான கவர்ச்சியை காட்ட முடியும் என்பதை நன்றாக உணர்ந்துள்ள ராஷ்மிகா மந்தனா, நாளைய தினம் புஷ்பா 2 ரிலீசாக உள்ளது குறித்தும் தன்னுடைய உற்சாகத்தை பகிர்ந்துள்ளார்.

ராஷ்மிகா மந்தனா உற்சாக போஸ்: புஷ்பா 2 படத்தின் ரிலீசையடுத்து தான் உற்சாகமாக கேமரா முன்பு போஸ் கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புஷ்பா மற்றும் ஸ்ரீவள்ளி ரசிகர்கள் முன்னிலையில் வரவுள்ளதாகவும் கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ராஷ்மிகாவிற்காகவே இந்த படத்தை பார்க்கலாம் என்று கூறி வருகின்றனர். ஆயினும் அல்லு அர்ஜுன் மற்றும் சுகுமார் கூட்டணியில் உருவாகியுள்ள புஷ்பா 2 படத்தின் கதைக்களம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் பகத் ஃபாசில் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில் படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X