Pushpa 2 Day 2 Box Office: திடீரென குறைந்த புஷ்பா 2 வசூல்?.. ஆட்டம் அவ்வளவுதானோ.. இப்படி ஆகிப்போச்சே

சென்னை: அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் புஷ்பா 2. ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இத்திரைப்படம் நேற்று முன் தினம் பான் இந்தியா அளவில் வெளியானது. படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் வசூல் ரீதியாக முதல் நாளில் சக்கைப்போடு போட்டது. முதல் நாளிலேயே 294 கோடி ரூபாய்க்கும் மேல் உலகளவில் வசூல் செய்தததாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு புஷ்பா திரைப்படம் வெளியானது. அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி தெலுங்கு திரையுலகில் மட்டுமின்றி பான் இந்தியா அளவில் வசூல் சாதனையை செய்தது. இதனையடுத்து அந்தப் படத்தின் இரண்டாவது பாகமும் உருவானது. முதல் பாகம் போலவே இந்த இரண்டாம் பாகமும் இந்திய அளவில் மிகப்பெரிய ஹிட்டடிக்கும்; பல சாதனைகளை கண்டிப்பாக முறியடிக்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தார்கள்.

pushpa 2 allu arjun 2


படம் ரிலீஸ்: கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்தது. இதனையடுத்து கடந்த ஐந்தாம் தேதி பான் இந்தியா அளவில் படம் ரிலீஸானது. ஏற்கனவே இந்தப் படத்தின் மீது இருந்த உச்சக்கட்ட எதிர்பார்ப்பு காரணமாக ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டர்களுக்கு படையெடுத்தனர். அல்லு அர்ஜுனின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம், பட்டாசு வெடித்தது என தியேட்டரை ஒரு விழா கால நாள் போன்று மாற்றிவிட்டார்கள் ரசிகர்கள். இதன் மூலம் புஷ்பா படத்துக்கு பிறகு அல்லுவின் ரசிகர் பட்டாளம் பெருகியிருப்பதை உணர முடிகிறது.

கலவையான விமர்சனம்: முதல் நாள் முதல் காட்சியில் படத்துக்கு ஏகப்பட்ட பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்தது. அல்லு அர்ஜுன் படத்தை ஒட்டுமொத்தமாக தாங்கியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் எல்லாம் பட்டையை கிளப்பியிருக்கிறார் என்று ஏகத்துக்கும் கொண்டாடினார்கள். அதேசமயம் அடுத்தடுத்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள் படம் சூப்பரும் இல்லை, மொக்கையும் இல்லை என்று கூறினார்கள். இப்படி படத்துக்கு முதல் நாளிலேயே கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.

ராஷ்மிகா, ஸ்ரீலீலா: அதேபோல் படத்தின் பாடல்களில் ராஷ்மிகா மந்தனாவின் கிளாமர் கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது. மேலும் கடந்த பாகத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா நடனமாடி ரசிகர்களை கட்டிப்போட்டார். இந்தப் பாகத்தில் கிஸ்ஸிக் பாடலுக்கு ஸ்ரீலீலா நடனமாடி ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கிறார். இதற்காகவும் ஒரு கூட்டம் தியேட்டருக்கு சென்று படத்தை பார்க்கத்தான் செய்கிறது. எது எப்படியோ இந்தப் படம் கண்டிப்பாக தோல்வி படம் இல்லை என்பது மட்டும் உறுதியாகிவிட்டது.

முதல் நாள் வசூல்: கலவையான விமர்சனத்தை பெற்றாலும் முதல் நாளில் வசூல் சக்கைப்போடு போட்டது. முதலில் இந்தப் படம் 174 கோடி ரூபாய்வரை இந்தியாவில் மட்டும் வசூலித்ததாக கூறப்படுகிறது. படக்குழு நேற்று மாலை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் புஷ்பா 2 படம் உலகளவில் 294 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாக குறிப்பிட்டிருந்தது. இதன் காரணமாக பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் அர்ஜுனின் ரசிகர்கள். இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

இரண்டாவது நாள் வசூல் எவ்வளவு?: அதன்படி அந்தப் படம் இந்தியாவில் மொத்தம் நேற்று 90 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது தெலுங்கில் 27.1 கோடி ரூபாயும், ஹிந்தியில் 55 கோடி ரூபாயும், தமிழில் 5.5 கோடி ரூபாயும், கன்னடத்தில் 0.6 கோடி ரூபாயும், மலையாளத்தில் 1.9 கோடி ரூபாயும் வசூலித்திருப்பதாக Sacnilk அளித்திருக்கும் தகவலில் தெரியவந்திருக்கிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் முதல் நாள் வசூலைவிட இரண்டாவது நாள் வசூலில் டல்லடித்திருக்கிறதே என்று ஃபீல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X