Pushpa 2 Day 2 Box Office: கங்கம்மா ஆட்டம் தியேட்டர் தெறிக்குது.. 2வது நாளில் புஷ்பா 2 வசூல் கணிப்பு
சென்னை: ராகவா லாரன்ஸ் காஞ்சனா 2 படத்தில் நடித்து மிரட்டியதை போல அல்லு அர்ஜுன் கங்கம்மா கெட்டப்பை போட்டுக் கொண்டு நடனமாடியும் தீமித்தும் அதே உடையுடன் ராஷ்மிகாவுடன் "சூடாத தீ கங்கு மாதிரி" பாடலுக்கு நடனமாடியும் அதன் பின்னர் அண்ணன் மகளுக்காக லோக்கல் மைனர்களை அடி வெளுத்தும் விடுவது என புஷ்பா 2 படத்தையே மொத்தமாக அந்த 20 நிமிட நீண்டக் காட்சிகள் காப்பாற்றி விட்டது.
புஷ்பா படம் முதல் பாகத்தில் இருந்து 2வது பாகத்தின் கதை மொத்தமாக திசை மாறி எங்கெங்கோ சென்றாலும் ஃபேமிலி சென்டிமென்ட், கிளாமர் குத்தாட்டம், நம்ப முடியாத சூப்பர் ஹீரோ ரோப் ஆக்ஷன் என அனைத்து தெலுங்கு மசாலாவையும் கலந்துக் கட்டி ஒரு சரவெடி படத்தை சுகுமார் கொடுத்திருக்கிறார்.

பகத் ஃபாசிலின் கதாபாத்திரத்தை இப்படி மொக்கையாக முடித்து விட்டார்களே என சேட்டன்கள் வருந்தினாலும் பீலிங்ஸ் பாடலில் வைக்கப்பட்டுள்ள மலையாள வரிகளால் மல்லு அர்ஜுன் மலையாள ரசிகர்களையும் கவர் செய்துவிட்டார்.
நள்ளிரவில் அதிகரித்த தியேட்டர்கள்: கேஜிஎஃப் 2 படத்துக்குத் தான் கடைசியாக இப்படி தியேட்டருக்கும் டிக்கெட்டுகளுக்கும் டிமாண்ட் அதிகரிக்க அதிரடியாக நள்ளிரவு காட்சிகளை கூடுதலாக அதிகரித்தனர். இந்நிலையில், புஷ்பா 2 படத்துக்கும் ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் பல பகுதிகளில் முதல் நாள் இரவே கூடுதலாக நள்ளிரவு காட்சிகள் அதிகரித்தன.
250 கோடி வசூல்: புஷ்பா 2 திரைப்படம் முதல் நாளில் ஆர்ஆர்ஆர், ஜவான், கல்கி 2898 ஏடி என அனைத்து படங்களின் வசூலையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு உலகளவில் 250 கோடி வசூலை அள்ளியுள்ளது. இந்தியாவில் மட்டுமே 179 கோடி வசூலை புஷ்பா 2 செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகளவில் 250 கோடி வசூலை முதல் நாளில் ஈட்டிய நிலையில், 2வது நாள் டிக்கெட் புக்கிங்கும் பல இடங்களில் ரெட் அலர்ட்டாக மாறி வருகின்றன.

நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி: கங்குவா படத்துக்கு குவிந்ததை போலவே அல்லு அர்ஜுன் படத்துக்கும் பொதுமக்கள் முதல் விமர்சகர்கள் வரை பலரும் படத்தின் கதை சரியில்லை என்றும் பல காட்சிகள் லாஜிக் மீறல்களாக உள்ளது என அடி வெளுத்து வருகின்றனர். ஆனால், அதையெல்லாம் தாண்டி அல்லு அர்ஜுனின் ஸ்டார்டம் ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைத்து வருகின்றன. நெகட்டிவ் விமர்சனங்களால் புஷ்பா 2 படத்தின் வசூலை ஒன்றுமே செய்ய முடியவில்லை என்று அல்லு அர்ஜுன் ரசிகர்கள் அதகளப்படுத்தி வருகின்றனர்.
2வது நாள் வசூல் கணிப்பு: உலகளவில் 2வது நாளே அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா 2 திரைப்படம் 350 முதல் 360 கோடி வரை வசூல் செய்யும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ராஷ்மிகா மந்தனா மற்றும் ஸ்ரீலீலா இருவரும் கவர்ச்சி காட்டி நடனமாடியது மற்றும் அல்லு அர்ஜுன் புடவை கட்டி அம்மனாகவே கர்ஜித்து குரவலை எல்லாம் கடித்து ரப்பா ரப்பா என சண்டை போடுவதை பார்க்க மக்கள் படையெடுத்து வருவதால் முதல் வார முடிவில் 700 கோடி வசூலை புஷ்பா 2 கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











