Pushpa 2 BO: நான் ஸ்டாப் ஓட்டம்.. 1700 கோடி கிளப்பில் இணைந்த புஷ்பா 2.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை: அதீத சந்தோஷத்தையும் அதே அளவுக்கு பிரச்சனைகளையும் ஒருவர் இந்த ஆண்டு சந்திக்கிறார் என்றால் அது நம்ம ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனாகத்தான் இருக்க முடியும். அடங்காதவன் என புஷ்பா 2 படத்தில் ஆர்ப்பாட்டம் செய்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தியேட்டருக்கு வரவழைத்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனையை படைத்துள்ளார்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பகத் ஃபாசில், ராவ் ரமேஷ், ராஷ்மிகா மந்தனா, சுனில், அனுசுயா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் இந்த மாதம் டிசம்பர் 5ம் தேதி வெளியானது. 21 நாட்களில் மொத்தமாக 1700 கோடி வசூலை கடந்துள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை புஷ்பா டீம் அறிவித்துள்ளது.

pushpa 2 pushpa 2 box office allu arjun 2 2

பாகுபலி 2 சாதனையை இந்த வார இறுதிக்குள் புஷ்பா 2 முறியடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

லீக்கான ஹெச்டி: புஷ்பா 2 படத்தை அப்படி யாரு இன்னமும் தியேட்டருக்குப் போய் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என மீம்ஸ் போடும் அளவுக்கு புஷ்பா 2 படத்தின் ஹெச்டி லீக்கான நிலையிலும் தொடர்ந்து பாலிவுட் ரசிகர்களின் பேராதரவுடன் புஷ்பா 2 திரைப்படம் இன்னொரு 100 கோடி ஏத்திக்கோ என கிறிஸ்துமஸ் விடுமுறையுடன் அலேக்காக பெரிய கலெக்‌ஷனை பாக்ஸ் ஆபிஸில் அள்ளியிருக்கிறது.

pushpa 2 pushpa 2 box office allu arjun 2 2

1700 கோடி கிளப்: தெலுங்கு திரையுலகில் இதுவரை நம்பர் ஒன் வசூல் படமாக பாகுபலி 2ம் பாகம் உள்ளது. அந்த ரெக்கார்டை புத்தாண்டு விடுமுறைக்குள் புஷ்பா 2 முறியடித்துவிடும் என்கின்றனர். அந்தளவுக்கு நான் ஸ்டாப் ரன்னிங்காக தியேட்டரில் பலரும் ராஷ்மிகா மந்தனாவின் ஃபீலிங்ஸ் பாடலை பார்க்கவும், அல்லு அர்ஜுனின் கங்கம்மா ருத்ர தாண்டவத்தை பார்க்கவும் குவிந்து வருகின்றனர். 21 நாட்களில் இதுவரை 1705 கோடி ரூபாய் வசூலை புஷ்பா 2 படம் அள்ளியிருப்பதாக அறிவித்துள்ளனர். 1800 கோடி வசூல் வந்தால் பாகுபலி 2 ரெக்கார்டை முறியடித்துவிடும்.

2 கோடி நஷ்ட ஈடு: அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படத்தை பெரிதாக புரமோட் செய்து பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்ட வேண்டும் என நினைத்ததன் விளைவாக சந்தியா தியேட்டரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் காரணமாக ரேவதி எனும் பெண் உயிரிழந்தார். அவரது மகன் மூளைச்சாவு அடைந்துள்ளான். இந்நிலையில், அல்லு அர்ஜுன் கைதுக்கு பிறகு தற்போது அல்லு அர்ஜுன், புஷ்பா 2 படக்குழு என பலரும் இணைந்து ஒட்டுமொத்தமாக 2 கோடி வரை நஷ்ட ஈடு கொடுத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X