Pushpa 2 Day 9 BO: சிறையில் அடைக்கப்பட்ட அல்லு அர்ஜுன்.. புஷ்பா 2 படம் 9 நாள் வசூல் இத்தனை கோடியா?

சென்னை: சந்தியா 70 எம் எம் தியேட்டரில் ரசிகர்களுடன் புஷ்பா 2 படத்தை பார்க்க நினைத்து அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்த நிலையில், அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக ரேவதி எனும் 39 வயது மதிக்கத்தக்க பெண் பரிதாபமாக பலியான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு நேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் 6 நாட்களில் 1002 கோடி ரூபாய் வசூல் வேட்டை நடத்திய நிலையில், வெள்ளிக்கிழமையான நேற்று அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு கறுப்பு நாளாகவே மாறியது.

allu arjun pushpa 2 box office allu arjun arrest 2

அல்லு அர்ஜுனுக்கு தெலங்கானா உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில், அந்த பேப்பர்கள் சிறை அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்டு இன்று அவர் வெளியே வருவாரா என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், புஷ்பா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்து இங்கே காணலாம்.

6 நாளில் 1000 கோடி வசூல்: இந்திய சினிமாவில் டோலிவுட் திரையுலகில் ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா டகுபதி, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் நடிப்பில் வெளியான பாகுபலி 2ம் பாகம் படம் தான் அதிவேகமாக 10 நாட்களில் 1000 கோடி வசூலை ஈட்டியது. அதைவிட அசுர வேகமாக வெறும் 6 நாட்களில் 1002 கோடி வசூல் செய்து புஷ்பா 2 திரைப்படம் மிகப்பெரிய வரலாற்று சாதனை படைத்த சந்தோஷத்தை கொண்டாடிக் கொண்டிருந்த அல்லு அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு திருஷ்டி பட்டது போல தற்போது ரேவதி மரண வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அல்லு அர்ஜுன் செய்தது தவறு: மிகப்பெரிய ஸ்டார்டம்மை கொண்டுள்ள அல்லு அர்ஜுன் இப்படி ஒரு தியேட்டருக்குச் சென்று படம் பார்த்தால் என்ன என்ன பின் விளைவுகள் ஏற்படும் என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும் என்றும் தனது பலத்தை காட்டுகிறேன் என்கிற பெயரில் பரிதாபமாக ஒரு உயிர் பலியான நிலையில், அல்லு அர்ஜுன் சிறையில் அடைக்கப்பட்டது சரிதான் என சிலரும் அல்லு அர்ஜுனை பழிவாங்க தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி எடுத்த நடவடிக்கை தான் இது என்று எதிர்க்கட்சிகளும் கூறி வருகின்றன.

9 நாள் வசூல்: இந்தியாவிலேயே அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் 762 கோடி ரூபாய் வசூலை கடந்த 9 நாட்களில் செய்துள்ளது என்றும் உலகளவில் புஷ்பா 2 படத்தின் வசூல் 1150 கோடி வரை சென்றிருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. சனிக்கிழமையான இன்றும் ஞாயிற்றுக்கிழமையான நாளையும் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா 2 திரைப்படம் 1300 கோடி வரை உலகளவில் வசூல் ஈட்ட வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர்.

பிரபலங்கள் ஆதரவு: அல்லு அர்ஜுனை கார்னர் செய்து வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர் என்றும் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாக நாம்பலி குற்றவியல் நீதிமன்றத்தில் அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டு 14 நாட்கள் சிறையில் இருக்க வேண்டும் என உத்தரவு கொடுத்தது எல்லாமே பழிவாங்கும் நடவடிக்கை என்றும் கூட்ட நெரிசலில் ஒரு பெண்ணின் உயிர் போனது அனைவருக்கும் வருத்தமான விஷயம் தான். ஆனால், அதற்கு அல்லு அர்ஜுன் எப்படி பொறுப்பேற்க முடியும் என சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X