லவ் பண்ற வரைக்கும் தான் ராஷ்மிகாவுக்கு சீன்.. கல்யாணத்துக்கு அப்புறம் இல்லையாம்.. புஷ்பா 2 அப்டேட்!
ஹைதராபாத்: புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் அதிகம் பேசப்பட்ட நடிகை ராஷ்மிகா மந்தனா அந்த படத்தில் அதிக கவர்ச்சி காட்டி நடித்தது மட்டுமின்றி சாமி சாமி பாடலில் அப்படியொரு ஆட்டத்தையும் போட்டு படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தார்.
அல்லு அர்ஜுன் ஸ்ரீவள்ளியை துரத்தி துரத்தி காதலித்து, கடைசியில் கிளைமேக்ஸில் திருமணம் செய்து கொள்வது போல அந்த படம் நிறைவடையும்.
இந்நிலையில், புஷ்பா 2 படத்தில் ராஷ்மிகாவுக்கு பெரிய வேலையே இல்லை என ஹாட் அப்டேட்கள் கசிந்துள்ளன.

கீதா கோவிந்தம்
கன்னட திரையுலகில் அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் மூலம் நேஷ்னல் கிரஷ்ஷாக மாறினார். அந்த படத்திற்கு பிறகு மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் என முன்னணி டோலிவுட் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் ராஷ்மிகா மந்தனா. டியர் காம்ரேட் படத்தில் மீண்டும் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்திருந்தார்.

புஷ்பா ஸ்ரீவள்ளி
அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த புஷ்பா திரைப்படத்தில் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் படு யதார்த்தமாகவும் தாராள கவர்ச்சியுடனும் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வசீகரித்தார் நடிகை ராஷ்மிகா மந்தனா. புஷ்பா படத்தில் நடித்த ராஷ்மிகாவுக்கு விஜய்யின் வாரிசு மற்றும் பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன.

விஜய்க்கு ஜோடி
தமிழில் கார்த்தியின் சுல்தான் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா விஜய் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியான வாரிசு படத்திலும் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். வாரிசு படத்தில் தனக்கு பெரிய வேலை இல்லை என்றும் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்கிற தனது நீண்ட நாள் கனவுக்காக மட்டுமே நடித்தேன் என அவர் பேசியதும் சர்ச்சையை கிளப்பியது.

பாலிவுட்டில் பிஸி
பாலிவுட்டில் அமிதாப் பச்சன் உடன் குட்பை படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா சித்தார்த் மல்ஹோத்ராவுடன் இணைந்து மிஷன் மஜ்னு படத்தில் நடித்தார். அடுத்ததாக ரன்பீர் கபூர் உடன் இணைந்து அனிமல் படத்தில் நடித்து வருகிறார். தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட்டுக்கு படையெடுத்துள்ள சமந்தா, நயன்தாராவுக்கு கடும் போட்டியாக மாறி உள்ளார் ராஷ்மிகா மந்தனா.

புஷ்பா 2வில் குறைவு
புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா காதலிக்கும் காட்சிகள் அதிகம் இடம்பெற்ற நிலையில், புஷ்பா 2வில் ராஷ்மிகா மந்தனா காட்சிகள் அதிகம் இருக்காது என்கின்றனர். ஆரம்பத்திலேயே ராஷ்மிகா மந்தனாவை கொன்று விடுவார்கள் என வெளியான மீம்கள் உண்மையாகிடும் போல தெரிகிறதே எனக் கூறுகின்றனர்.

சர்ச்சை பேச்சு
சமீப காலமாக பாலிவுட் பட வாய்ப்புகள் கிடைத்து வரும் நிலையில், கன்னட திரையுலகத்தையும் தென்னிந்திய திரையுலகத்தையும் நடிகை ராஷ்மிகா மந்தனா மதிக்காமல் இஷ்டத்துக்கு பேசி வருவதாக ஏகப்பட்ட ட்ரோல்களும் குவிந்து வருகின்றன. புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளி பாடல் செம ரொமாண்டிக்காக இருந்த நிலையிலும், பாலிவுட்டில் தான் நல்ல காதல் பாடல்கள் உள்ளன என்றும் தென்னிந்தியாவில் குத்துப் பாடல்கள் மட்டுமே அதிகம் உள்ளதாக பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும், காந்தாரா படத்தை ராஷ்மிகா மந்தனா பாராட்டாதது கன்னட திரையுலகில் அவருக்கு எதிரான பல கண்டனங்களை உருவாக்கியது. அதன் பின்னர் படத்தை பார்த்து விட்டேன் நல்லா இருக்கு என பேசி அதை சரி கட்டினார் ராஷ்மிகா.


Click it and Unblock the Notifications











