அந்த ஏரியாவுல பிரபாஸ் பக்கத்துல கூட வரமுடியலையாமே.. மாஸ் காட்டும் கல்கி.. முந்துமா புஷ்பா 2?
சென்னை: மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் கடைசி நேரத்தில் பல பிரச்சனைகள் சந்தித்தாலும் ரிலீஸ் தேதி தள்ளிப் போகாமல் ஒரு நாள் முன்னதாக டிசம்பர் 5ம் தேதியே வெளியாக உள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ப்ரீ புக்கிங்கிலேயே 100 கோடி வசூல் என புஷ்பா 2 போஸ்டர் அடித்து அலப்பறை கிளப்பியுள்ள நிலையில், ஓரிடத்தில் பிரபாஸின் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடிக்க முடியாமல் புஷ்பா 2 திணறுகிறது என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் புஷ்பா 2 படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது. முதன்முதலில் ஏஜிஎஸ் தியேட்டர்களில் தான் டிக்கெட் புக்கிங் ஓபனாகி அதிரடியாக விற்றுத் தீர்ந்தன. விஜய்யின் கோட் திரைப்படத்தை தயாரித்து இந்த ஆண்டு லாபம் பார்த்த ஏஜிஎஸ் நிறுவனம் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படத்தை ரிலீஸ் செய்தும் தமிழ்நாட்டில் லாபம் பார்க்க காத்திருக்கின்றனர்.

ஆல் ஏரியாவிலும் ஐயா கில்லிடான்னு புஷ்பராஜ் காலரை தூக்கி விட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தம்பி இது என் சாம்ராஜ்யம் என கல்கி 2898 ஏடி படத்தின் மூலம் பிரபாஸ் கர்ஜித்துக் கொண்டிருக்கிறார்.
டோலிவுட் எங்கேயோ போயிடுச்சு: தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தளபதி விஜய், அஜித் குமார், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி என பவர் ஹவுஸ் பர்ஃபார்மர்கள் இருந்தாலும் டோலிவுட் சினிமா ராஜமெளலியின் வருகைக்கு பின்னர் எங்கேயோ சென்றுவிட்டது. பாலிவுட் நடிகர்களே நடுங்கும் அளவுக்கு அசால்ட்டாக ஒவ்வொரு வருடமும் 1000 கோடி படங்களை அசால்ட்டாக கொடுத்து வருகின்றனர்.
புஷ்பா 2 அட்வான்ஸ் புக்கிங்: சுகுமார் இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத், சாம் சி.எஸ் இசையில் உருவாகியுள்ள புஷ்பா 2 படத்தின் அட்வான்ஸ் புக்கிங் மூலமாக இதுவரை 2 மில்லியன் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. முதல் நாளில் அதிகபட்சமாக 250 கோடி வரை வசூல் வேட்டையை புஷ்பா 2 நடத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபாஸ் ரெக்கார்டை முறியடிக்கல: புஷ்பா 2 திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை கிரியேட் செய்திருந்த பல படங்களின் சாதனைகளை முறியடித்து வரும் நிலையில், நார்த் அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி நடத்திய ப்ரீ புக்கிங் டிக்கெட் சாதனையை முறியடிக்கவில்லை என மனோபாலா விஜயபாலன் ட்வீட் போட்டுள்ளார். கல்கி 2898 ஏடி திரைப்படம் 3 மில்லியன் அமெரிக்க டாலர்களை சுமார் 35 கோடி ரூபாயை முதல் நாள் ப்ரீ புக்கிங்கில் ஈட்டியது. ஆனால், இதுவரை அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் வெறும் 2.5 மில்லியன் டாலர்களை மட்டுமே வட அமெரிக்காவில் ஈட்டியிருக்கிறது.
நம்பர் ஒன் யாரு?: இந்த ஆண்டு பிரபாஸ் நடித்த கல்கி 2898 ஏடி படத்தின் மொத்த வசூலை ஒரே வாரத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 முறியடிக்கும் என அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மலைபோல நம்பி வருகின்றனர். அந்தளவுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வரும் நிலையில், அதற்கு தகுந்தது போல தரமான சம்பவத்தை புஷ்பா 2 செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் அல்லு அர்ஜுனுக்கே தயாரிப்பாளர் 300 கோடி சம்பளம் கொடுக்க காரணமே படத்தின் மீதான நம்பிக்கை தான் என்றும் நிச்சயம் பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை பெற்று நம்பர் ஒன் சிம்மாசனத்தில் இந்த ஆண்டு முடிவில் பிரபாஸை இறக்கிவிட்டு அல்லு அர்ஜுன் அமர்வார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











