நான் தாடியை ட்ரிம் பண்ணா போதும் தாங்கமாட்ட.. புஷ்பா 2 இயக்குநருக்கும் அல்லு அர்ஜுனுக்கும் பிரச்சனை?

ஹைதராபாத்: புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற நிலையில், புஷ்பா 2 படத்தை 500 கோடி பட்ஜெட்டில் அதிக செலவு செய்து இயக்குநர் சுகுமார் இயக்கி வருகிறார். அல்லு அர்ஜுனும் சுகுமார் சொல்வதற்கு எல்லாம் சம்மதம் தெரிவித்து நடித்து வந்த நிலையில், புஷ்பா 2 படத்தின் புரமோஷன்கள் எதுவுமே பெரிதாக க்ளிக் ஆகவில்லை.

மேலும், அந்த படத்தை பெரிய தொகைக்கு வாங்க ஆந்திராவிலேயே விநியோகஸ்தர்கள் ரெடியாக இல்லை என்கிற அதிர்ச்சியால் தான் படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பதில் டிசம்பர் 6ம் தேதிக்கு தள்ளிப்போனது என சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கள் கிளம்பின.

pushpa 2 allu arjun sukumar

புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பையே இன்னமும் சுகுமார் முடிக்காமல் அல்லு அர்ஜுனை பல வருடங்களாக இழுத்து அடித்து வருகிறார் என்கிற பிரச்சனை தற்போது வெடித்துள்ளது.

ஈகோ கிளாஷ்: அல்லு அர்ஜுனுக்கு புஷ்பா படம் பிடித்த அளவுக்கு புஷ்பா 2 படம் பிடிக்கவில்லை என்கின்றனர். கிரியேட்டிவ் மோதல்கள் தொடர்ந்து இயக்குநருக்கும் ஹீரோ அல்லு அர்ஜுனுக்கும் இடையே வெடித்து வந்த நிலையில், தான் அடிக்கடி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும், புஷ்பா திரைப்படம் 2021ம் ஆண்டு வெளியான நிலையில், 2வது பாகத்தை எடுக்க 2 ஆண்டுகளுக்கு மேல் சுகுமார் ஆக்கி விட்டதாகவும் கூறுகின்றனர்.

தாடியை ட்ரிம் பண்ண அல்லு அர்ஜுன்: புஷ்பா 2 படத்தில் புஷ்பராஜ் கதாபாத்திரத்துக்காக நீண்ட தாடி வைத்து நடித்து வந்த அல்லு அர்ஜுன் திடீரென ட்ரிம் பண்ண லுக்கில் தென்பட்ட காட்சிகள் இணையத்தில் தீயாக பரவின. அதற்கு பின்னாடி இவ்வளவு பெரிய பிரச்சனை இருக்கிறது என டோலிவுட் சினிமா வட்டாரத்தில் பெரும் புயல் கிளம்பி இருக்கிறது. #Pushpa2 ஹாஷ்டேக் இந்தியளவில் தற்போது பூதாகரமாக டிரெண்டாகி வருகிறது.

ஸ்ரீகாந்த் பண்ணது போல: நண்பன் படப்பிடிப்பின் போது நடிகர் ஸ்ரீகாந்த் திடீரென தாடியை க்ளீன் ஷேவ் செய்து விட்டு வந்த நிலையில், அதை பார்த்து கடுப்பான ஷங்கர் அவர் தாடி மற்றும் மீசையை வளர்க்க ஒன்றரை மாதங்கள் காத்திருந்து நண்பன் படத்தை இயக்கியதாக சமீபத்தில் ஸ்ரீகாந்த் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். அதே போல புஷ்பா 2 படத்தின் ஷூட்டிங்கை தவிர்க்கவே அல்லு அர்ஜுன் தாடியை ட்ரிம் பண்ணி விட்டாரா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

ஆடு புலி ஆட்டம்: புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பை தாமதப்படுத்த அல்லு அர்ஜுன் தாடியை ட்ரிம் செய்து விட்டு தனது குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றார் என்றும் அவர் திரும்பி வந்ததும் இயக்குநர் சுகுமார் அமெரிக்காவுக்கு ஃபேமிலியுடன் டூர் கிளம்பி விட்டார் என்றும் சுகுமார் திரும்பி வந்ததும் மீண்டும் தற்போது அல்லு அர்ஜுன் ஐரோப்பியாவுக்கு டூர் போயுள்ளார் என டோலிவுட்டில் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வெடித்து வருகின்றன.

கடுப்பில் தயாரிப்பாளர்: இப்படி ஹீரோவும் இயக்குநரும் ஈகோ மோதல் காரணமாக படப்பிடிப்பை தாமதப்படுத்தி வரும் நிலையில், தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் கடும் அப்செட்டில் இருப்பதாகவும் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி படத்தை முடிக்க திட்டமிட்டு வருவதாக கூறுகின்றனர். டிசம்பர் 6ம் தேதி புஷ்பா 2 ரிலீஸ் ஆகுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப் போவதாகவும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X