Pushpa 2 BO: 1000 கோடி வசூலை தாண்டியதா புஷ்பா 2?.. 5 நாள் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

சென்னை: ஃபயர் இல்லை வைல்டு ஃபயர் என ஹெவி பில்டப் கொடுத்தாலும் கிளைமேக்ஸில் சங்கை கடித்து சாகடித்தாலும் ஜாத்தாரா போர்ஷனில் கங்கம்மாவாக காந்தாரா எஃபெக்டில் அல்லு அர்ஜுன் நடித்த நடிப்பை பார்த்த பாலிவுட் ரசிகர்கள் இந்தியிலேயே 330 கோடி வசூலை புஷ்பா 2 படம் குவிக்க காரணமாக அமைந்து விட்டது.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்துக்களை மையப்படுத்திய படங்களை இந்தி ரசிகர்கள் மிகப்பெரிய ஹிட்டாக்கி வருகின்றனர். காந்தாரா, ஹனுமான், கல்கி 2, புஷ்பா 2 உள்ளிட்ட படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெறவும் அந்த விஷயம் முக்கிய காரணியாக மாறியிருக்கிறது.

pushpa 2 pushpa 2 box office allu arjun 2 2

அமரன் படத்தில் இடம்பெற்ற ஜெய் பஜ்ரங்பலி என்கிற கோஷம் கூட பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கு ஒத்துழைப்புக் கொடுத்ததாக கூறுகின்றனர். கங்குவா படத்தில் அந்த டிராமா எல்லாம் மிஸ் ஆனது தான் அந்த படம் இந்தி ரசிகர்களை கவராமல் போக காரணமே என்றும் ஆதி நெருப்பே பாடலுக்கு முன்பாக காளியம்மாவை வணங்கி சூர்யா ஒரு வெறித்தனமான ஆட்டத்தை போட்டிருந்தால் அந்த படமும் வசூல் வேட்டை நடத்திருக்கும் என்கின்றனர்.

புஷ்பா 2 வசூல்: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5ம் தேதி வெளியான நிலையில், டிசம்பர் 9 நேற்று வரை 922 கோடி ரூபாய் வசூலை புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் ரூல் செய்து வருவதாக படக்குழு புதிய போஸ்டருடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஷாருக்கானின் ஜவான், கல்கி 2898 ஏடி படங்கள் எல்லாம் லைஃப் டைம் வசூலாக 1000 கோடி ரூபாய் வசூலை கடந்த நிலையில், முதல் வாரத்திலேயே அந்த வசூல் சாதனையை புஷ்பா 2 படைக்கும் என தெளிவாக தெரிகிறது.

pushpa 2 pushpa 2 box office allu arjun 2 2

1000 கோடி வசூல்: வார நாட்களிலும் புஷ்பா 2 படத்தின் வசூல் வட இந்தியா மற்றும் ஆந்திராவில் குறையவே இல்லை என்றும் கூறுகின்றனர். செவ்வாய்க்கிழமையான இன்று இரவுக் காட்சியுடன் புஷ்பா 2 திரைப்படம் 1001 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாளை 1000 கோடி ரூபாய் வசூல் போஸ்டரை புஷ்பா 2 படக்குழு வெளியிடும் என தெரிகிறது.

அட்லி இயக்கத்தில்: அல்லு அர்ஜுன் அடுத்து அட்லி இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்லு அர்ஜுனை வைத்து யார் இயக்கினாலும் சம்பளம் குறைந்தது 350 கோடி ரூபாயாக உயரும் எனக் கூறுகின்றனர். ஒரே வாரத்தில் 1000 கோடி வசூலை அல்லு அர்ஜுன் வசூல் செய்தால் எந்த தயாரிப்பாளராக இருந்தாலும் நம்பி அவர் மீது பெரிய தொகையை பெட் கட்டுவார்கள் என்றே கூறுகின்றனர். பிரபாஸை தொடர்ந்து தெலுங்கில் அல்லு அர்ஜுன் மிகப்பெரிய நட்சத்திரமாக மாறியுள்ளார். ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் மகேஷ் பாபு படம் வெளியான பின்னர் அவர் நிலைமையும் இப்படி மாறிவிடும் என்கின்றனர். புஷ்பா 2வின் பிரம்மாண்ட வெற்றி ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்துக்கு மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்திருப்பதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X