வந்துச்சே பீலிங்ஸு.. வடிவேலு காமெடியை அப்படியே உருவிட்டாரேப்பா.. புஷ்பா 2 தெறிக்கும் வீடியோ மீம்!

சென்னை: அல்லு அர்ஜுனை தாண்டி புஷ்பா 2 படத்தில் மொத்த ரசிகர்களையும் ஸ்ரீலீலாவை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு இந்த முறை ஸ்ரீவள்ளியாக நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா தான் ஆக்கிரமித்துள்ளார். புஷ்பா தி ரைஸ் படத்தில் ஸ்ரீவள்ளியை திருமணம் செய்வதுடன் படம் முடிந்திருக்கும். 2ம் பாகத்தின் ஆரம்பத்திலேயே ஸ்ரீவள்ளியை வில்லன் ஆட்கள் போட்டுத் தள்ளிவிடுவார்கள் என்றும் அதற்கு பழிவாங்கவே புஷ்பா செயல்படுவார் என்றெல்லாம் கட்டுக் கதைகள் வெளியாகின.

ஆனால், மொத்த 2ம் பாகத்தையும் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தை வைத்தே அசால்ட்டாக நகர்த்தி ரசிகர்களை திக்குமுக்காட செய்துவிட்டார் இயக்குநர் சுகுமார். ராஷ்மிகா மந்தனாவால் தான் இந்த பார்ட்டுக்கு கதையே கிடைத்ததா? என நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அதெல்லாம் இல்லைங்க வடிவேலுவின் இந்த படக் காமெடியை பார்த்து தான் மனுஷன் உருவி 500 கோடில மெகா இண்டஸ்ட்ரி ஹிட் படத்தையே எடுத்து வைத்திருக்கிறார் என வைகைப்புயல் ஆர்மியினர் வீடியோ மீம் ஒன்றை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

pushpa 2 vadivelu meme 2

அதை பார்த்தால், ஆமாம்ப்பா அப்படியே இருக்கே என நெட்டிசன்கள் எல்லாம் இதைத்தான் இத்தனை வருஷமா ஒட்டிக்கிட்டு இருந்தியா என இயக்குநர் சுகுமாரை பார்த்து கலாய்க்கும் விதமாக கமெண்ட் போட்டு வருகின்றனர்.

காக்கா ஆயி போனதுக்காடா கலவரம்: வடிவேலுவின் காமெடிகள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் தான். "காக்கா ஆயி போனதுக்காடா இவ்வளவு பெரிய கலவரம்" என வடிவேலு சொல்வதை போல ஒரே ஒரு போட்டோ பொண்டாட்டி கேட்டதற்காக ஆந்திராவில் ஆட்சி மாற்றத்தையே புஷ்பராஜ் கொண்டு வருவதெல்லாம் ரொம்ப ஓவர் என கிண்டல் செய்தாலும் அதைத்தான் தற்போது வாயை பொளந்துக் கொண்டு டோலிவுட் ரசிகர்கள் முதல் பாலிவுட் ரசிகர்கள் வரை கழுத்துக்கு மேலே கையை வைத்து புஷ்பா புஷ்பா என கெத்துக் காட்டி வருகின்றனர்.

குசேலன் படக் காமெடி சீன்: வந்துச்சே பீலிங்ஸ் என அல்லு அர்ஜுன் வடிவேலு போல ஓடி வந்து சோனாவிடம் (ராஷ்மிகா மந்தனா) சம்பள பணத்தை தர, இதெல்லாம் பத்தாது சிஎம் (சூப்பர் ஸ்டார்) உடன் போட்டோ எடுத்து வந்தாதான் நமக்குள்ள நடக்க வேண்டியது நடக்கும் என ரஜினிகாந்த், பசுபதி, மீனா, வடிவேலு நடித்த குசேலன் படத்தின் காமெடி சீனை வைத்து புஷ்பா 2 படத்தின் கதையையே சுகுமார் இங்கே இருந்து தான் சுட்டு இருக்கிறார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

காஞ்சனா முதல் பகவதி வரை: மேலும், புஷ்பா 2 படத்தின் கிளைமேக்ஸில் பகவதி படத்தின் கிளைமேக்ஸில் வரும் பாம் சீனை எல்லாம் அப்படியே எடுத்து வைத்திருக்கிறார் என்றும் காஞ்சனா படத்தில் ராகவா லாரன்ஸ் பண்ணதை தான் பட்டுப் புடவை கட்டிக் கொண்டு அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படத்தில் மிரட்டலாக நடித்துள்ளார் என்றும் ரசிகர்கள் அனைத்தையும் கண்டுபிடித்து கவுன்ட்டர் அடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X