புஷ்பா படத்தில் இயக்குநர் செய்த மாற்றங்கள்.. ராஷ்மிகா கேரக்டர் பத்தியும் அப்டேட் வெளியாகியிருக்கு!

ஐதராபாத் : நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் நடிப்பில் மிரட்டலான திரைக்கதையுடன் கடந்த ஆண்டில் வெளியானது புஷ்பா படம்.

இந்தப் படத்தில் மரங்களை கடத்தும் நபராக நடித்திருந்தார் அல்லு அர்ஜுன். தன்னுடைய கெட்டப்பை மாற்றி நடித்திருந்த இவரது கேரக்டர் நல்ல விமர்சனங்களை பெற்றது.

இந்தப் படம் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடி நல்ல வசூலையும் பெற்றுத் தந்துள்ளது.

நடிகர் அல்லு அர்ஜுன்

நடிகர் அல்லு அர்ஜுன்

நடிகர் அல்லு அர்ஜுன் சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டவர். ஆர்யா, தேசமுடுரு, சங்கர் தாதா சிந்தாபாத், ஆர்யா 2, வருடு, வேதம், ரேஸ் குர்ராம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

புஷ்பா படம்

புஷ்பா படம்

தொடர்ந்து பல சிற்பபான படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இறுதியில் இவரது நடிப்பில் வெளியானது புஷ்பா படம். இந்தப் படத்தில் கரடுமுரடான கதாபாத்தில் நடித்திருந்தார் அல்லு அர்ஜுன். அலா வைகுந்தபுரமுலு படத்தில் ஸ்டைலிஷ்ஷான கேரக்டரில் நடித்திருந்த இவரை இப்படி பார்ப்பது ரசிகர்களுக்கு புதிதாக இருந்தது.

மரக்கடத்தல் படம்

மரக்கடத்தல் படம்

செம்மரக் கடத்தலை மையமாக கொண்டு புஷ்பா படம் வெளியானது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாகியிருந்தார் ராஷ்மிகா மந்தனா. இந்தப் படத்தின் வெற்றியே அவருக்கு விஜய்யுடன் தளபதி 66 படத்தில் நடிக்க வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது. தொடர்ந்து புஷ்பா 2 படமும் தற்போது உருவாக உள்ள நிலையில், அதிலும் ராஷ்மிகா நடிக்கவுள்ளார்.

தள்ளிப் போன சூட்டிங்

தள்ளிப் போன சூட்டிங்

இந்தப் படத்திற்கான ஸ்கிரிப்டை முன்னதாக புஷ்பா படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே சுகுமார் உருவாக்கிவிட்டார். அந்தப் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே இரண்டாவது பாகமும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது புஷ்பா 2 படத்தின் சூட்டிங் தள்ளிப் போயுள்ளது.

கதையில் மாற்றம்

கதையில் மாற்றம்

சமீபத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் மற்றும் கேஜிஎப் படங்களை பார்த்த சுகுமார், அதுபோன்ற பிரம்மாண்டத்தை தன்னுடைய படத்திலும் சேர்க்க திட்டமிட்டுள்ளாராம். அந்தப் படங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தன்னுடைய படத்திலும் பல காட்சிகளை சேர்க்கவும் முடிவெடுத்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளாராம்.

இயக்குநரின் வேறு லெவல் திட்டம்

இயக்குநரின் வேறு லெவல் திட்டம்

இதனால்தான் படத்தின் சூட்டிங் தாமதமாவதாக தற்போது கூறப்பட்டுள்ளது. அடுத்த மாதத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கதையில் பகத் பாசிலும் இணையவுள்ள நிலையில், அல்லு அர்ஜூன் மற்றும் பகத் பாசிலின் காம்பினேஷன் காட்சிகளை அதிகரிக்கவும் சுகுமார் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குறைக்கப்பட்ட ராஷ்மிகா காட்சிகள்

குறைக்கப்பட்ட ராஷ்மிகா காட்சிகள்

முதல் பாகத்தில் ராஷ்மிகா மந்தனாவிற்கு அதிகமான காட்சிகள் காணப்பட்டன. சாமி பாட்டிற்கு அவர் போட்ட ஆட்டத்தை ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க மாட்டார்கள். இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாகத்தில் ராஷ்மிகாவிற்கு காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ராஷ்மிகா ரசிகர்கள் ஏமாற்றம்

ராஷ்மிகா ரசிகர்கள் ஏமாற்றம்

இந்தத் தகவல் தற்போது ராஷ்மிகா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் பாகத்தில் காட்டில் மரம் வெட்டும் காட்சிகள் அதிகமாக இருந்தது. பிரம்மாண்டமான வகையில் கடத்தல் காட்சிகளும் பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது இரண்டாவது பாகத்திலும் அதுபோன்ற காட்சிகளை கூடுதல் கவனத்துடன் சேர்க்க சுகுமார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சமந்தாவிற்கு பதில் யார்?

சமந்தாவிற்கு பதில் யார்?

முதல் பாகத்தில் மிரட்டலான திரைக்கதையுடன் ரசிகர்களை சந்தித்தது புஷ்பா படம். இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில், ரசிகர்களை இரண்டாவது பாகமும் திருப்தி படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதேபோல முதல் பாகத்தில் சமந்தா ஒரு பாட்டிற்கு சிறப்பான ஆட்டம் போட்டிருந்தார். இந்த பாகத்தில் அதுபோல யார் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X