Allu Arjun: ஏப்ரல் 8ம் தேதி புஷ்பா 2 டீசர்.. கொண்டாட்டத்திற்கு தயாரா மக்களே!

சென்னை: நடிகர் அல்லு அர்ஜுன் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருபவர். இவரது நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியானது புஷ்பா தி ரைஸ். இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பாடல்களும் மிகுந்த கவனத்தை பெற்றது. குறிப்பாக ஊ சொல்றியா மாமா பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. படம் பான் இந்தியா படமாக வெளியாகி சர்வதேச அளவில் 300 கோடி ரூபாயை தாண்டி வசூலித்தது. இந்தப் படத்தில் ஸ்டைல் கிங்காக வலம்வரும் அல்லு அர்ஜுனின் நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த பாகம் தற்போது உருவாகி வருகிறது. புஷ்பா 2 தி ரூல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. முதல் பாகத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாகம் மிகவும் பிரம்மாண்டமாக அதிகமான பொருட்செலவில் உருவாகி வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் இந்த படம் ரிலீசாக உள்ளதாக கூறப்படும் நிலையில் வரும் எட்டாம் தேதி அல்லு அர்ஜுனனின் பிறந்த நாளையொட்டி இந்த படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Pushpa 2 movie teaser release on 8th of April on Allu arjun s birthday celebration

நடிகர் அல்லு அர்ஜுன்: நடிகர் அல்லு அர்ஜுன் டோலிவுட்டின் முன்னணி ஹீரோவாக பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். அவரது நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டில் வெளியானது புஷ்பா தி ரைஸ் படம். சுகுமார் இயக்கத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் வெளியான இந்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சர்வதேச அளவில் 300 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்தது. படத்தின் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது. ஊ சொல்றியா மாமா மற்றும் சாமி ஆகிய பாடல்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ரீச் செய்தது.

புஷ்பா 2 படம்: இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக மிகுந்த பொருட்செலவில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடைய உள்ளதாகவும் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி படம் பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புஷ்பா 2 தி ரூல் படத்தின் டீசர் வரும் எட்டாம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். எட்டாம் தேதி அல்லு அர்ஜுனின் பிறந்த தினத்தை ஒட்டி இந்த டீசர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புஷ்பா 2 படத்தின் டீசர் ரிலீஸ்: நடிகர் அல்லு அர்ஜுனும் இந்த தகவலை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து மிரட்டலான போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். முன்னதாக வெளியான போஸ்டரை தொடர்பு படுத்தும்வகையில் இந்த போஸ்டரும் காணப்படுகிறது. இந்தப் படத்தின் முதல் பாகம் வட மாநில ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. அங்கு வசூலும் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் அந்தப் படத்தை காட்டிலும் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் இரண்டாவது பாகமும் காட்சி அமைப்புகளிலும் பாடல்கள் மூலமாகவும் மிகப்பெரிய கவனத்தை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

அல்லு அர்ஜுன் -அட்லி கூட்டணி?: இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் அட்லியுடன் அடுத்தப்படத்தில் அல்லு அர்ஜுன் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இநத்ப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளையொட்டி வரும் 8ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடி வரும் சூழலில் இந்த ஆண்டு அடுத்தடுத்த அவரது படங்களின் அப்டேட்களும் வெளியாகவுள்ளதால் இந்த ஆண்டும் அவர்களின் கொண்டாட்டங்களுக்கு குறைவிருக்காது என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X