இந்தியளவில் நம்பர் ஒன்.. பாகுபலி 2, தங்கல் வசூலை முறியடித்த புஷ்பா 2.. புத்தாண்டில் இத்தனை கோடியா?

சென்னை: இந்தியளவில் இதுவரை எந்தவொரு படமும் செய்யாத வசூல் சாதனையை புஷ்பா 2 நிகழ்த்தியுள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த படம் பாலிவுட் ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கவர்ந்தது தான். வட இந்தியாவில் காளி மாதாவை வழிபடுவோர் அதிகம் உள்ள நிலையில், புஷ்பா 2 படத்தில் இடம்பெற்ற கங்கம்மா போர்ஷன் இந்தி ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்துக் கொண்டே இருக்கிறது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ராவ் ரமேஷ், ஸ்ரீலீலா, சுனில், அனுசுயா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் புத்தாண்டு தினமான நேற்றும் பெரும் தொகையை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

pushpa 2 box office new year 2025 bahubali 2 2 2025


ஏற்கனவே உலகளவில் 1760 கோடி ரூபாய் வசூலை புஷ்பா 2 ஈட்டியதாக போஸ்டர்களை அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட நிலையில், புத்தாண்டு வசூல் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என தெரிகிறது.

இந்தியளவில் நம்பர் ஒன்: புஷ்பா 2 திரைப்படம் வேறு எந்தவொரு இந்திய படமும் செய்யாத வசூல் சாதனையை இந்தியாவில் நிகழ்த்தியுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் மட்டும் புஷ்பா 2 படத்தின் வசூல் சாதனை இதுவரை 1184.65 கோடி ரூபாயாக உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. அமீர்கான் நடித்த தங்கல் மற்றும் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி 2 உள்ளிட்ட படங்கள் இதில் பாதியைக் கூட இந்தியளவில் வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆல் டைம் நம்பர் ஒன் பாக்ஸ் ஆபிஸ் படமாக அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 சரித்திர சாதனையை படைத்துள்ளது. சுமார் 750 கோடி வசூல் இதில், இந்தி பெல்ட்டில் மட்டுமே கிடைத்திருப்பது தான் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.

நியூ இயரில் மட்டும்: ஆங்கிலப் புத்தாண்டு நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படத்தை மீண்டும் காண மக்கள் தியேட்டருக்கு படையெடுத்துள்ளனர். இந்தியாவில் மட்டும் நேற்று ஒரு நாளில் 10 கோடி ரூபாய் வசூலை புஷ்பா 2 திரைப்படம் அள்ளியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலகளவில் மூன்றாமிடம்: இதுவரை இந்தியாவில் வெளியான படங்களிலேயே அதிக பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனை அள்ளிய படமாக இன்னமும் முதலிடத்தில் இருப்பது அமீர்கானின் தங்கல் திரைப்படம் தான். இந்தியளவில் 500 கோடி வசூலை மட்டுமே அள்ளிய அந்த படம் சீன ரிலீஸில் செம வேட்டை நடத்தி ஒட்டுமொத்தமாக 2070 கோடி ரூபாய் வசூலுடன் முதல் இடத்தில் உள்ளது. ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வெளியான பாகுபலி 2 திரைப்படம் உலகளவில் 1810 கோடி ரூபாய் வசூலை ஈட்டி 2வது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் புஷ்பா 2 உள்ளது.

பாகுபலி 2 ரெக்கார்டை உடைத்ததா?: புத்தாண்டு பண்டிகையுடன் பாகுபலி 2 படத்தின் உலக வசூல் ரெக்கார்டையும் புஷ்பா 2 முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 1780 கோடி ரூபாய் வரை இதுவரை உலகளவில் புஷ்பா 2 வசூல் செய்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஒரு 30 கோடி வசூல் செய்தால் பாகுபலி 2 சாதனையை புஷ்பா 2 முறியடிக்கும். அதிகாரப்பூர்வ அறிவிப்பில் 1800 கோடி ரூபாய் போஸ்டர் இன்று வெளியானால் அதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X