என்னது புஷ்பா 2 ஷூட்டிங் கேன்சல் ஆகிடுச்சா?: அப்போ 10 மொழிகளில் உருவாகும்ன்னு சொன்னது என்னாச்சு?
ஐதராபாத்: அல்லு அர்ஜுன், ஃபஹத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் வெளியான 'புஷ்பா' திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.
பான் இந்தியா திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் புஷ்பா படத்திற்கு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதன் 2ம் பாகம் 10 மொழிகளில் உருவாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஷூட்டிங் கேன்சல் ஆகிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

ஹிட்டோ ஹிட்டு
சுகுமார் இயக்கத்தில் அல்லுர் அர்ஜூன் ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா, வில்லனாக ஃபஹத் ஃபாசில் ஆகியோருடன் மேலும் பலர் நடித்த 'புஷ்பா' வசூல் வேட்டை நடத்தி அதகளம் செய்தது. பான் இந்தியா படமாக வெளியான 'புஷ்பா' படத்திற்கு, பாலிவுட் ரசிகர்களிடமும் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. வெளியான 5 மொழிகளிலும் அதிரடி ஹிட் கொடுத்த இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

அல்லு அர்ஜுன் VS ஃபஹத் பாசில்
'புஷ்பா 2' படத்தின் இரண்டாம் பாகத்தில், அல்லு அர்ஜுனுக்கும் ஃபஹத் ஃபாசிலுக்கும் மிரட்டலான ஆக்சன் காட்சிகள் இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதற்கான லீட் உடனே 'புஷ்பா' படத்தின் முதல் பாகத்தை முடித்திருந்தார் இயக்குநர் சுகுமார். கடைசி 15 நிமிடங்கள் மட்டுமே திரையில் தோன்றிருந்தாலும், ஃபஹத் ஃபாசிலின் வில்லத்தனம் மெர்சலாக இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்திருந்தனர். இதனால், 2ம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறிப் போய் உள்ளது.

புஷ்பா 3ம் பாகம்
புஷ்பா இரண்டாம் பாகத்திற்கான ஷூட்டிங்கே இன்னும் தொடங்காமல் இருக்கும் நிலையில், விரைவில் மூன்றாம் பாகமும் உருவாகும் என கொளுத்திப் போட்டுள்ளார் ஃபஹத் ஃபாசில். இரண்டாம் பாகத்தின் கதை சர்வதேச அளவில் பயணிப்பதாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால், மூன்றாம் பாகம் வெளியானால், அதில் இன்னும் சில தரமான சம்பவங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக புஷ்பா மூன்றாம் பாகத்தில் மனோஜ் பாஜ்பாய் நடிக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்தத் தகவலை மனோஜ் பாஜ்பாய் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷூட்டிங் கேன்சல்
இந்த நிலையில், 'புஷ்பா 2' படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருந்த நிலையில், தற்போது இயக்குநர் சுகுமார் அதை கேன்சல் செய்துவிட்டதாக தெரிகிறது. புஷ்பா 2 படத்தின் ஷூட்டிங்காக இயக்குநர் சுகுமார் இரண்டு இரடங்களைத் தேர்வு செய்துவைத்திருத்தார். அதில் ஒன்றான ஆந்திர மாநிலம் மரிடுமில்லி என்ற பகுதியில், மழை வெளுத்து வாங்குவதால், அங்கு நடக்கவிருந்த ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டார்களாம். அதேபோல் ராம் சரணின் 'ரங்கஸ்தலம்' படத்தின் ஷூட்டிங் நடந்த பகுதியில், பொலாவரம் பிராஜக்ட் நடந்து வருவதால், அங்கும் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை எனத் தெரிகிறது.

அப்போ இன்னொரு அப்டேட்
இதனிடையே, புஷ்பா இரண்டாம் பாகம் 10 மொழிகளில் உருவாக உள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகின. முதல் பாகம் பான் இந்தியா படமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதால், இந்த முறை கூடுதலாக 10 மொழிகளில் உருவாக்க படக்குழு திட்டமிட்டிருந்தனர் எனக் கூறப்படுகிறது. ஆனால், இப்போது ஷூட்டிங் கேன்சல் ஆகிவிட்டதால், இந்த அப்டேட்டும் கேள்விக்குறியாக உள்ளது. இருந்தாலும், புஷ்பா 2 ஷூட்டிங் குறித்து நல்ல தகவல்கள் வெளியாகும் என ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











