புஷ்பா 2 ஷூட்டிங் நிறுத்தம்… இயக்குநர் எடுத்த அதிரடி முடிவு…’’கேஜிஎஃப் 2’’ தான் காரணமா?
சென்னை : புஷ்பா 2 ஷூட்டிங்கை இயக்குநர் சுகுமார் அதிரடியாக நிறுத்தி உள்ளார். இதனால் படக்குழுவினர் குழப்பம் அடைந்துள்ளார்.
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் புஷ்பா. சுகுமார் இயக்கியிருந்த இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.
பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடித்திருந்தார். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் பிரம்மாண்டமாக வெளியாகி வசூலை வாரிக் குவித்தது.

புஷ்பா
புஷ்பா திரைப்படம் இந்திய சினிமா வரலாற்றில் பெரும் புயலை கிளப்பியது. பொது வெளியிலும், சமூக வலைதளங்களிலும் அந்தப் படத்தின் காட்சிகள், வசனங்கள், பாடல்கள் அவை குறித்த ரீல்ஸ், டிக் டாக் வீடியோ உள்ளிட்டவை பெரும் திரளாக வலம் வந்தன. புஷ்பானா ப்ளவர்னு நெனச்சியா...புஷ்பானா பயர்னு சொல்லும் வசனம் இணையத்தில் டிரெண்டானது.

350 கோடி வசூலித்து
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் புஷ்பா வெளியிடப்பட்டது. மேலும் இப்படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக நடிகை சமந்தா, ஒரு ஐட்டம் சாங்கிற்கு குத்தாட்டம் போட்டிருந்தார். இந்த பாடலைப் போல் படமும் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. சுமார் 350 கோடிக்கு மேல் வசூலித்து சாதனையும் படைத்தது.

பிரம்மாண்ட
புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டு இருந்த நேரத்தில் இயக்குநர் சுகுமார் ஷூட்டிங்கை திடீரென நிறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, கேஜிஎஃப் 2 திரைப்படத்தை பார்த்த இயக்குநர் சுகுமார், ஒவ்வொரு காட்சியையும் பிரம்மாண்டத்தையும் பார்த்து மிரண்டுவிட்டாராம்

ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு
புஷ்பா2 திரைப்படம் கேஜிஎஃப் 2 படத்திற்கு இணையாக இருக்க வேண்டும் என்றும், ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு படத்தின் ஸ்கிரிப்டில் சில மாறுதல்கள் செய்யும் பணியில் இறங்கி இருக்கிறாராம். அதனால், புஷ்பா 2 திரைப்படம் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக இருக்கும் என்றும், விரைவில் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











