Pushpa 2 Shooting: புஷ்பா 2 படத்தின் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டாரா இயக்குநர்?.. ரசிகர்கள் அதிர்ச்சி

ஹைதராபாத்: Pushpa 2 Shooting (புஷ்பா 2 ஷூட்டிங்) புஷ்பா 2 படத்தின் ஷூட்டிங்கை நிறுத்திய இயக்குநர் சுகுமார் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை அழித்துவிட்டு மீண்டும் ஷூட்டிங்கை தொடங்க திட்டமிட்டிருக்கிறார் என கூறப்படுகிறது.

புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

மெகா ஹிட்டான புஷ்பா

மெகா ஹிட்டான புஷ்பா


சுகுமார் இயக்கத்தில் உருவாகி மெகா ஹிட்டான படம் புஷ்பா. பான் இந்தியா அளவில் வெளியாகி 500 கோடி ரூபாய்வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பாகுபலி படத்துக்கு பிறகு பல மொழிகளில் ஹிட்டான தெலுங்கு படம் என்ற பெயரையும் புஷ்பா திரைப்படம் பெற்றது. அப்படத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தற்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.

புஷ்பா 2வுக்கு நோ சொன்ன சமந்தா

புஷ்பா 2வுக்கு நோ சொன்ன சமந்தா

புஷ்பா படத்தின் முதல் பாகம் எவ்வளவுக்கு எவ்வளவு ஹிட் ஆனதோ அதே அளவு சென்சேஷ்னல் ஹிட்டானது ஊ சொல்றியா மாமா பாடல்தான். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பில் சமந்தா அந்தப் பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். இதனையடுத்து தற்போது உருவாகும் புஷ்பா 2 படத்திலும் அதேபோல் ஒரு நடனம் ஆடுவதற்கு சமந்தாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் அதற்கு சமந்தா திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

விறுவிறுப்பாக நடக்கும் ஷூட்டிங்

விறுவிறுப்பாக நடக்கும் ஷூட்டிங்

இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் சமீபத்தில் விறுவிறுப்பாக நடந்தது. இதில் அல்லு அர்ஜுன் மற்றும் பிற நடிகர் நடிகைகள் கலந்துகொண்டனர். மேலும், இலங்கை மற்றும் தாய்லாந்தில் ஷூட் செய்யவும் திட்டமிடப்பட்டிருந்தது. எனவே படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிவடைந்து படத்தின் வெளியீடு சீக்கிரமாகவே இருக்கும் என்றும், படத்தின் டீசரை அல்லு அர்ஜுனின் பிறந்தநாளான ஏப்ரல் 8ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்பட்டது.

நின்றுவிட்டதா புஷ்பா 2 ஷூட்டிங்

நின்றுவிட்டதா புஷ்பா 2 ஷூட்டிங்

ஆனால் புஷ்பா 2 படம் குறித்த சமீபத்திய தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதாவது புஷ்பா 2 படத்தில் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை இயக்குநர் சுகுமார் போட்டுப் பார்த்ததாகவும் அது அவருக்கு திருப்தி அளிக்காததால் மேற்கொண்டு நடக்கவிருந்த ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை அழித்துவிட்டு மீண்டும் முதலில் இருந்து அவர் ஷூட்டிங்கை தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

புஷ்பா 2 திரைப்படத்தில் சாய் பல்லவி

புஷ்பா 2 திரைப்படத்தில் சாய் பல்லவி

இதற்கிடையே புஷ்பா 2 திரைப்படத்தில் சாய் பல்லவி நடிக்க கமிட்டாகியிருக்கிறார் என தகவல்கள் வெளியாகின. ஆனால் கவர்ச்சி நடனம் ஆடுவதற்கு சாய் பல்லவி கமிட்டாகவில்லை எனவும், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் படத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் கதாபாத்திரமாக சாய் பல்லவி இருப்பார் எனவும், இதற்காக அவர் பத்து நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தார் என தகவல் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X